- Advertisement -
ஆட்டிறைச்சி பாசுமதி அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இந்த கீமா புலாவ் . பொதுவாக ஒரு கறி அல்லது ரைதாவுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணிக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள்: சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீமா புலாவ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கீமா புலாவ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேரளா கீமா புலாவ் | keema pulao Recipe in Tamil
ஆட்டிறைச்சி பாசுமதி அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இந்த கீமா புலாவ் . பொதுவாக ஒரு கறி அல்லது ரைதாவுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணிக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீமா புலாவ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 1546kcal
Equipment
- கடாய்
- கரண்டி
- குக்கர்
தேவையான பொருட்கள்
- ½ kg புலாவ் அரிசி
- ½ kg கொத்துகறி
- இஞ்சி, பூண்டு சிறிது
- 1 வெங்காயம்
- 1 tsp மிளகாய்த்தூள், தனியா
- 2 சோம்பு, பட்டை, கிராம்பு
- 3 tbsp நல்எண்ணெய்
- 1 cup தயிர்
- 1 pinch கேசரி பவுடர்
- 2 tbsp நெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- கீமா புலாவ் செய்ய முதலில் கறியை அரை வேக்காடு வேக வைக்கவும். வெங்காயம், பூண்டை நறுக்கவும். இஞ்சி, மல்லி சோம்பை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கி அதனுடன் கொத்துக் கறி, இஞ்சி, மிளகாய்த் தூள், தனியா, சோம்பு அரைத்தது எல்லாம் போட்டு வதக்கவும்.
- தயிரைக் கலந்து அதனுடன் கொஞ்சம் உப்பும் சேர்த்து கிண்டவும். இதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, தேவையான நீரில் அரிசியை கழுவி பட்டை, கேசரி பவுடர் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
- பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டுக் கொஞ்சம் சாதத்தைப் பரப்பி அதன் மேல் கறியை பரப்பவும். இப்படி மாற்றி மாற்றி பரப்பி மேலாகச் சாதம் இருப்பது போல் செய்யவும். சுவையான கீமா புலாவ் தயார்
Nutrition
Serving: 1150gm | Calories: 1546kcal | Carbohydrates: 94g | Protein: 23g | Fat: 22g | Saturated Fat: 2.2g | Polyunsaturated Fat: 1.9g | Monounsaturated Fat: 12.8g | Trans Fat: 16.7g | Cholesterol: 34mg | Sodium: 1098mg | Potassium: 857mg | Sugar: 3.6g | Calcium: 5.4mg