- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பெரும்பாலும் நிறைய பேரு கீரை சாப்பிடவே மாட்டாங்க ஆனா கீரை சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும். கீரையில் நிறைய வகைகள் இருக்கு கீரைகள் சாப்பிடுவதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை கீரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கீரையை அப்படியே சாப்பிடாதவங்களுக்கு கீரை வைத்து கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பீஸ் செஞ்சு கொடுக்கலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம கீரை வச்சு ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் கீரை ஊத்தப்பம் செய்யப் போறோம்.
இந்தக் கீரை ஊத்தப்பம் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். இதுல ரவை கோதுமை மாவு தயிர் எல்லாம் சேர்த்து செய்ய போறோம். இன்ஸ்டன்ட் ஆக செய்ய போறதால பேக்கிங் சோடா சேர்த்துக்கணும். பாலக் கீரை சேர்த்து இந்த சூப்பரான கீரை ஊத்தப்பம் செய்ய போறோம். நீங்க உங்களுக்கு பிடிச்ச எந்த கீரை வேணும்னாலும் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா கீரையும் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்தக் கீரை ஊத்தப்பம் ரெசிபி ரொம்பவே வித்தியாசமாகவும் இருக்கும். இந்த ரெசிபிக்கு காரமா ஏதாவது கிரேவி ஊத்தி சாப்பிடலாம் அப்படி இல்லன்னா கார சட்னி மாதிரி ஏதாவது வச்சு சாப்பிடலாம்.
எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். மறக்காம மிஸ் பண்ணாம இந்த இன்ஸ்டன்ட் கீரை ஊத்தப்பம் ஒரு தடவ செஞ்சு பாருங்க. வீட்ல எப்பவுமே இட்லி தோசை மாவு இருக்கும் அந்த மாதிரி இல்லாத சமயத்துல இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு பாருங்க. இந்த ஊத்தப்பம் செய்யும் போது திருப்பி போட்டு வேக வைக்க தேவையில்லை. ஒரு பக்கம் மிதமான தீயில் வைத்து வேக வைத்தாலே போதுமானது. இப்ப வாங்க இந்த சுவையான கீரை ஊத்தப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஒரு தடவை நெல்லிக்காய் சட்னி செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
பாலக் கீரையை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் சேர்த்து பத்து நிமிடத்தில் எடுக்கவும். அதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு கோதுமை மாவு ரவை அவல் தயிர் பச்சை மிளகாய் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து தோசை கல்லில் நெய் சேர்த்து ஊத்தப்பம் ஊற்றி எடுத்து பரிமாறினால் சுவையான கீரை ஊத்தப்பம் தயார்.






