இட்லி தோசைக்கு ஒரு தடவை நெல்லிக்காய் சட்னி செஞ்சு அசத்துங்க!

- Advertisement -

நம்ம வித விதமா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கண்டிப்பா நெல்லிக்காய் சட்னி ஒரு சிலர் தான் ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க ஒரு சிலர் வீட்ல நெல்லிக்காய் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. பொதுவா நமக்கு நெல்லிக்காய் கிடைச்சது அப்படின்னா அதை வச்சு ஊறுகாய் போடுவோம் அப்படி இல்லன்னா தேன் நெல்லிக்காய் செய்வோம். ஆனால் நெல்லிக்காய் நிறைய கிடைக்கும் போது அதை வைத்து இந்த மாதிரி நெல்லிக்காய் சட்னி செஞ்சு பாருங்க. உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானதாவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியானதாகவும் இருக்கும். அதில் இருக்கக்கூடிய புளிப்பு தன்மை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சட்னிக்கு நம்ம வதக்க தேவையில்லை. சட்டுனு பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இதுல நெல்லிக்காய் இருக்கு அப்படின்னு கண்டுபிடிக்க முடியாது நெல்லிக்காய் வேண்டுமே வேண்டாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு இந்த நெல்லிக்காய் சட்னியை தெரியாமல் செஞ்சு கொடுத்து சாப்பிட வச்சிருங்க இதுல வைட்டமின் சி அதிகமா இருக்கிறதால உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்கும். அதனால அவ்ளோ ஒரு அற்புதமான நெல்லிக்காயை கண்டிப்பா அலட்சியப்படுத்தி விடாம டெய்லி கூட நீங்க நெல்லிக்காயை உங்க உணவில் சேர்த்துக்கிட்டு வரலாம்.

- Advertisement -

ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்களுக்கு இந்த நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமா கண்டிப்பா உடம்புல ஹீமோகுளோபின் அதிகமாகும். இந்த நெல்லிக்காய் சட்னியும் கூட இட்லி தோசை சப்பாத்தி கூட வச்சு சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும் சுட சுட சாதத்துக்கும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். பழைய சாதத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம கலவை சாதங்களுக்கு இதை சைடு டிஷ்ஷா தொட்டுக்கிட்டு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.

அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க இதிலேயே சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ஆகும் கொடுத்துவிடலாம். அப்படி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கும் போது கொஞ்சமா புளி மட்டும் சேர்த்து அரைச்சுக்கோங்க. காரணம் இதுல நம்ம தேங்காய் சேர்க்க போறோம். அதனால கெட்டுப் போகாம இருக்கிறதுக்காக தான் புளி சேர்க்கிறோம். உடனே சாப்பிட போறதா இருந்தா புளி தேவை இல்லை. இப்ப வாங்க இந்த ருசியான நெல்லிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

நெல்லிக்காய் சட்னி | Gooseberry Chutney Recipe In Tamil

நம்ம வித விதமா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கண்டிப்பா நெல்லிக்காய் சட்னி ஒரு சிலர் தான் ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க ஒரு சிலர் வீட்ல நெல்லிக்காய் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. பொதுவா நமக்கு நெல்லிக்காய் கிடைச்சது அப்படின்னா அதை வச்சு ஊறுகாய் போடுவோம் அப்படி இல்லன்னா தேன் நெல்லிக்காய் செய்வோம் ஆனால் நெல்லிக்காய் நிறைய கிடைக்கும் போது அதை வைத்து இந்த மாதிரி நெல்லிக்காய் சட்னி செஞ்சு பாருங்க உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானதாவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியானதாகவும் இருக்கும். அதில் இருக்கக்கூடிய புளிப்பு தன்மை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சட்னிக்கு நம்ம வதக்க தேவையில்லை. சட்டுனு பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney
Cuisine: Indian, TAMIL
Keyword: Gooseberry Chutney
Yield: 4 People
Calories: 81kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 நெல்லிக்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 பல் பூண்டு
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு சின்ன வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து விட்டால் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 81kcal | Carbohydrates: 4.1g | Protein: 34g | Fat: 2g | Sodium: 134mg | Potassium: 223mg | Fiber: 7.8g | Vitamin C: 600mg | Calcium: 57mg | Iron: 31mg

இதனையும் படியுங்கள் : நெல்லிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த நெல்லிக்காய் முராப்பா செஞ்சு பாருங்க!

-விளம்பரம்-