- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- Breakfast, LUNCH
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்
இதையும் படியுங்கள் : மழைக்கு இதமா சுட சுட பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி ?
சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீட்ரூட் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள்,செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட் சிறிதளவு வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய உடன் பீட்ரூட்டில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
பின்னர் இரண்டு நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் தயார் ஆன பீட்ரூட் பொரியலை ஒரு பாத்திரத்தில் இறக்கி பரிமாறவும், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்






