- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- dinner, LUNCH
வழக்கமான சால்னா வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, ஒருசிலர்க்கு சைவ சால்னா சிலருக்கு அசைவ சால்னா பிடிக்கும், ஆனால் இந்த சால்னா அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும், குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கேரளா சால்னா
இதையும் படியுங்கள்: மதுரை ஹோட்டல் சுவையில் மட்டன் சால்னா இப்படி செய்து பாருங்க!
செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கேரளா சால்னா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
கேரளா சால்னா செய்ய முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் பட்டை, ஏலக்காய்,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.லேசாக வறுத்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி,பூண்டு தோல் நீக்கி நறுக்கி அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி வதங்கியதும் சிறிதளவு புதினாவை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் நன்றாக வதங்கிய பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை சேர்த்து கொள்ள வேண்டும்.பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின் நன்றாக வதங்கிய பின்னர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்க வேண்டும். இப்பொழுது எண்ணெய் பிரிந்து வாசனை வரும் வரை வேக வைக்க வேண்டும். இப்போது சால்னா தயார்.






