- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிக்கறி
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கேரட் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!
செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளிக்கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
புளிக்கறி செய்ய முதலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி சிறு துண்டுகளாக கட் செய்து வைத்திருக்கின்ற முருங்கைக்காயை அதில் போட்டு வேக வைக்க வேண்டும்.
அதில் புளி கரைசலை உற்ற வேண்டும். அரைத்து விழுதை முருங்கைக்காய் கலவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும். சிறிது உப்பு போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முருங்கைக்காய் கலவை வேக வைத்த பின் தாளித்தவற்றை அதில் போட வேண்டும். இப்பொழுது சுவையான புளிக்கறி தயார்.






