ருசியான கொல்த்தா முட்டை சப்பபாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸ்!!

- Advertisement -

இந்த கொல்கத்தா ஸ்டைல் ​​முட்டை ரோல்களை ஒரு விரைவான இரவு உணவிற்கு சூடாகப் பரிமாறவும் அல்லது பிக்னிக் மற்றும் மதிய உணவுப் பெட்டிகளுக்குப் பேக் செய்யவும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுவிதமான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும். அப்படி எதாவது புதுவிதமான உணவாக இருந்தால் அதனை அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : மாலை வேலையில் டீ, காப்பியுடன் சாப்பிட ஏற்ற எக் பிங்கர்ஸ் செய்வது எப்படி ?

- Advertisement -

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முட்டையானது உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த முட்டை சில குழந்தைகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. இதுவரை அவர்களுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் என்று தான் செய்து கொடுத்திருப்போம். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக அந்த முட்டையை ரோல் மாதிரி செய்து கொடுக்கலாமா!!!

Print
No ratings yet

கொல்கத்தா முட்டை சப்பாத்தி ரோல்| Kolkata Egg Chapathi Roll

இந்த கொல்கத்தா ஸ்டைல் ​​முட்டை ரோல்களை ஒரு விரைவான இரவு உணவிற்கு சூடாகப் பரிமாறவும் அல்லது பிக்னிக் மற்றும் மதிய உணவுப் பெட்டிகளுக்குப் பேக் செய்யவும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுவிதமான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும். அப்படி எதாவது புதுவிதமான உணவாக இருந்தால் அதனை அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியென்றால் கல்கத்தா ஸ்பெஷல் ரோல் ரெசிபியை உங்களின் குழந்தைகளுக்கு செய்துகொடுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: egg roll
Yield: 4 People
Calories: 211kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் மைதா
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • உப்பு தேவையானஅளவு
  • 4 முட்டை
  • 1 பெரிய
  • 1 வெள்ளரிக்காய்
  • 2 மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் சதக்காளி சாஸ்
  • 2 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் மைதா மாவுடன் சிறிது சக்கரை மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூடு உள்ள தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
  • பின்னர் கலந்த மாவை பிசைவதற்கு 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு மாவு தூவி 20 நிமிடங்களுக்கு நன்றாக இழுத்து பிசையவும்.
  • பிசைந்த மாவு காயாமல் இருப்பதற்காக 1ஸ்பூன் எண்ணெய் விட்டு தேய்த்து காற்று போகாதவாறு மூடி,4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு மாவை பெரிய உருண்டைகளாக பிடித்து அதன் மேல் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • பின்னர் 30நிமிடங்கள் கழித்து, உருண்டையை எடுத்து கையால் அல்லது சப்பாத்தி கட்டையால் அழுத்தி நன்றாக மெல்லிசாக விரித்து விடவும்.
  • பின்பு அதன் மேல் 1/2ஸ்பூன் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு தூவி, மேலும் கீழுமாக மடித்து சுருட்டி,எண்ணெய் விட்டு மேலும் 15நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஊறும் நேரத்தில், வெங்காயம், வெள்ளரிக்காயை நீளமாக மெல்லியதாக நறுக்கி, மிளகாயை சிறிதாக நறுக்கி அதில் லெமன் சாறு பிழிந்து, மிளகு தூள் தூவி கலந்து விடவும்.
  • பின் ஊறிய உருண்டைகளை வட்டமாக விரிக்கவும்.
  • அடுப்பில் தவா வைத்து எண்ணெய் விட்டு, வட்டமாக விரித்த பரோட்டா சேர்த்து மேலே சிறிதளவு எண்ணெய் விட்டு மீடியம் தீயில் வைத்து சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
  • பின் 1 பரோட்டவிற்க்கு, 2முட்டையை உப்பு சேர்த்து கலக்கி,பரோட்டா மேல் ஊற்றி திருப்பி போட்டு வேக வைக்கவும்.
  • இனி தயார் செய்த முட்டை பரோட்டவில், வெங்காயம் வெள்ளரிக்காய் கலவையை நடுவில் வைத்து அதில் மிளகுதூள், மிளகாய் தூவி, சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து சுருட்டி பிடித்துக் கொள்ள வசதியாக பட்டர் பேப்பரில் சுருட்டி பிடித்து சாப்பிடலாம்.
  • சூடாகவும், மென்மை ஆகவும் இருப்பதால், மென்று சாப்பிட கடினமாக இருக்காது. சுவைக்க அருமையாக இருக்கும்.
  • சுவையான, கொல்கத்தா எக் கதி ரோல் ரெடி. இன்னும் ஆரோக்கியமாக சாப்பிட, கோதுமை மாவில் செய்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 211kcal | Carbohydrates: 1.52g | Protein: 17.11g | Fat: 14.43g | Sodium: 168.64mg | Vitamin A: 796IU | Calcium: 68mg | Iron: 1.62mg