- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.
அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொள்ளு பருப்பு கடைசல் விரும்பி உண்பர்.
இதையும் படியுங்கள்: காரசாரமான கிராமத்து சுவையில் விரால் மீன் குழம்பு வீட்டுல இப்படி செஞ்சி பாருங்க!
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கொள்ளு பருப்பு கடைசல் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
கொங்கு நாட்டு கொள்ளு பருப்பு கடைசல் செய்ய முதலில் கொள்ளு பயறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக கழுவிய பின்னர் குக்கரில் தண்ணீர் ஊற்றி கொள்ளு, தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, சீரகம், உப்புஆகியவற்றை சேர்த்து எட்டு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு போட்டு மிளகாய் வற்றல்,வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
குக்கரில் உள்ள கொள்ளு கடைசலில் தாளித்தவற்றை போட வேண்டும். பின் பருப்பு கடைசலை வைத்து கடைய வேண்டும். இப்பொழுது சத்தான கொள்ளு கடைசல் தயார்.






