- Advertisement -
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும்.
இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும், ருசியாகவும் செய்து விடலாம்.
- Advertisement -
இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கொத்தமல்லி சட்னி | Kothamalli Chutney Recipe In Tamil
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும், ருசியாகவும் செய்து விடலாம்.இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 2 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 7 சின்ன வெங்காயம்
- 3 பல் பூண்டு
- 1 காய்ந்த மிளகாய்
- 4 பச்சை மிளகாய்
- 2 தக்காளி
- புளி சிரியதுண்டு
- உப்பு தேவைக்கேற்ப
- 1 கை பிடி கொத்தமல்லி
- ¼ கப் தேங்காய் துருவல்
தாளிக்க:
- 1 டீஸ்பூன் கடுகு
- உளுத்தம் பருப்பு
- ½ டீஸ்பூன் பெருங்காய தூள்
- 2 வரமிளகாய்
- கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து தீயை குறைவாக வைத்து வதக்கவும்.
- பிறகு வர மிளகாய், பச்சை மிளகாய், புளி, தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு கொழைய வதக்கவேண்டும்.
- வதங்கியதும் கொத்தமல்லி இழைகளை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
- பிறகு அடுப்பை நிறுத்தி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.