- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
கொத்தவரங்காய் என்றாலே சாதாரணமாக பொரியல் தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் கொத்தவரங்காய் பால் கறி எப்படி செய்வது என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆனால் கொத்தவரங்காய் பலருக்கு பிடிக்காது. அதற்கு அவர்கள் அதனை சரியாக சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை சரியாக சமைத்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது. கொத்தவரங்காய் வச்சு பொரியல் கொத்தவரங்காய் வச்சு புளிக்குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க. ஆனா கொத்தவரங்காய் வச்சு பால் கறி எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா.
ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும் புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். இந்த காயில் சுவையான பால் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த பால் கறி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இதை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். ஒரு தடவை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கொத்தவரங்காய் பொரியல் செய்வது எப்படி?
Ingredients
Method
முதலில் கொத்தவரங்காயை நன்கு தண்ணீரில் அலசி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கொத்தவரங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்.
பின் கொத்தவரங்காய் பாதி வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். காய் மற்றும் பால் ஒன்று சேர கொதித்து, கெட்டியானதும், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொத்தவரங்காய் பால் கறி தயார். இது, சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சூடான சாதத்தில் நெய் விட்டும் சாப்பிடலாம்.






