ஒரு கொட்டாங்குச்சி இருந்தால் போது பணம் கொட்டி கொண்டே இருக்கும் உங்கள் வீட்டில்!

- Advertisement -

பொதுவாக நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக தேங்காய் உடைத்து அந்த காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நமக்கு வெற்றியில் தான் முடியும் என்று சாஸ்திரங்களும், வேதங்களும் நமக்கு கூறுகின்றனர். தேங்காயில் உள்ள தண்ணீருக்கு எதிர்மறை ஆற்றலை தடுக்கக்கூடிய சக்தி உண்டு ஏனென்றால் தேங்காய் நேர்மறை ஆற்றலை கொண்ட ஒரு பொருள். அதனால்்தான் நான் இன்றளவும் கோவில்களுக்கு சென்று தேங்காய் உடைக்கின்றோம் சாமிகளுக்கு கூட தேங்காய் தண்ணீரை வைத்து அபிஷேகம் செய்கின்றோம். ஆனால் நாம் தேங்காய் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் அந்த கொட்டாங்குச்சியை வைத்து இன்று ஒரு தாந்திரீக சார்ந்த ஆன்மீக பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

கொட்டாங்குச்சியை சுத்தம் செய்யுங்கள்

நாம் இப்படி தூக்கி வீசும் இந்த கொட்டாங்குச்சியை வைத்து தான் நம் வீட்டிற்கு பணத்தை கொட்டி தரக்கூடிய ஒரு பரிகாரத்தை செய்து பார்க்க போகிறோம். அதற்காக நீங்கள் எடுத்துக் கொண்டு கொட்டாங்குச்சி முதலில் நன்றாக காய வைத்து அதன் உள்ளிருக்கும் மீத தேங்காய் அனைத்தையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். கொட்டாங்குச்சி நேராக வைத்தால் சாய்ந்து விடும் என்பதால் கொட்டாங்குச்சி சாயாமல் இருப்பதற்காக வடிவத்தில் உள்ள கிண்ணம் ஏதாவது ஒன்று எடுத்து கொண்டு அதன் மேல் வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கொட்டாங்குச்சியில் சேர்க்க வேண்டியவை

அதன் பின்பு கொட்டாங்குச்சியை நேராக வைத்த பின்பு கொட்டாங்குச்சியில் முதலில் ஒரு ஸ்பூன் கருப்பு எள் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்து அதன் மேல் இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு அண்ணாச்சி பூ ஆகியவற்றை அழகாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இந்த பொருட்களை எல்லாம் நாம் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் இந்த கொட்டாங்குச்சியை நாம் வீட்டின் வரவேற்பு அறையில் கொண்டு சென்று வையுங்கள்.

நல்ல சக்தியை வெளியேற்றும்

இப்படி இந்த கொட்டாங்குச்சியை நீங்கள் உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்திருக்கும் போது அதிலிருந்து நல்ல சக்தியானது வெளியேறி கொண்டே இருக்கும். அப்படி வெளியேறும் நல்ல சக்தி உங்கள் வீட்டில் இருப்பவருக்கு ஒரு மன நிம்மதியை கொடுக்கும் இதனால் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு இருந்தாலும் இனிமேல் அந்த பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். இதனுடன் நாம் கல்லுப்பு சேர்த்திருக்கிறோம் அதன் காரணமாக உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள், துர்சக்திகள் இருந்தால் இந்த கல்லு உப்பு அதை தனக்குள் தீர்த்துக் கொள்ளும்.

பணம் கொட்டும்

மேலும் கொட்டாங்குச்சியில் நாம் சேர்த்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் நம் குலதெய்வத்தை நினைத்து வைக்கின்றோம் அடுத்தபடியாக நாம் இதில் சேர்த்து இருக்கின்ற கருப்பு எள் நமக்கு சனி பகவானால் வரக்கூடிய பாதிப்புகள் எதுவும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இதில் நாம் சேர்த்திருக்கும் உப்பு, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ இந்த பொருள்கள் எல்லாம் மகாலட்சுமி தேவியின் அம்சமாக இருக்கக்கூடிய பொருட்கள். அதனால் இந்த பொருள்களுக்கு ஒரு சக்தி இருக்கின்றது பணத்தை ஈர்த்து கொடுக்கக்கூடிய சக்தி காரணமாக நம் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் மேலும் நம் வீட்டில் நல்ல ஆற்றல் இருந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

எதிர்மறையாக பேசக் கூடாது

இந்த பரிகாரத்தை செய்பவர்கள் முதலில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்தவுடன் பணம் கொட்ட வேண்டும் என்று நினைத்தால். அதற்காக நீங்களும் சில காரியத்தை செய்ய வேண்டும் அதாவது ஒரு சிலர் எனக்கு மட்டும்தான் கஷ்டமாக இருக்கின்றது, என்னிடம் மட்டுமே பணம் சேரவில்லை, என்னை தவிர இங்கு அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஏன் என் கையில் பணம் சேர மாட்டேங்குது என்று இது போன்ற எதிர்மறையாக பேசுவதை நீங்கள் நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த பரிகாரம் வேலை செய்யும். இந்த பரிகாரத்தை செய்துவிட்டு நீங்கள் இப்படி எதிர்மறையாக பேசிக் கொண்டிருந்தால் அந்த பரிகாரம் செய்த பலன் உங்களுக்கு கிடைக்காது.

நேர்மறையான எண்ணங்கள்

அதனால் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு நம்பிக்கையோடு இருங்கள் பணம் என் வீட்டில் கொட்ட போகிறது, நானும் வாழ்க்கையில் முன்னேறி விடுவேன், என் கையிலும் பணம் சேர்ந்து விடும், நானும் மற்றவர்களைப் போல் நிம்மதியாக வாழ்வேன் என்று நேர்மறையாக சிந்திக்கும் போது உங்களுடைய வாழ்க்கையும் முன்னேறும் பணமும் உங்களைத் தேடி வரும். இந்த பரிகாரம் செய்யும் போது நாம் இந்த பரிகாரத்தில் பயன்படுத்திய பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும் அப்படி மாற்றிய பொருட்களில் உப்பை மட்டும் தண்ணீரில் கரைத்து விட வேண்டும் மீத பொருட்களை மனிதர்களின் காலடி படாத இடத்தில் போட்டு விட வேண்டும். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்