Advertisement
சட்னி

நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கோவைக்காய் சட்னியை செய்து பாருங்கள். கோவைக்காய் சட்னி சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவக்காய் சிறந்த மருந்தாகும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் அது மட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிப்பதன் மூலம் நம் உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதிகள், காயம் அடைந்து சரும திசுக்கள் மீண்டும் உருவாக இப்படி பல நன்மைகள் கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் உடலுக்கு கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த கோவைக்காய் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

கோவைக்காய் சட்னி | Kovakkai Chutney Recipe in Tamil

Print Recipe
கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் அது மட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிப்பதன் மூலம் நம் உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதிகள், காயம் அடைந்து சரும திசுக்கள் மீண்டும் உருவாக இப்படி பல நன்மைகள் கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் உடலுக்கு கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த கோவைக்காய் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Course chutney
Cuisine Indian, TAMIL
Keyword Kovakkai chutney, கோவைக்காய் சட்னி
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 30 minutes
Servings 4 person

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

வதக்கி அரைக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • ¼ KG கோவைக்காய்
  • ¼ கப் புளி தண்ணீர் புளியை ஊரவைத்து கரைத்து கொள்ளவும்
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp உளுந்த பருப்பு
  • ¼ சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 மிளகாய் வத்தல்
  • கருவேப்பிலை சிறிது

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் கோவைக்காயை சுத்தமான தண்ணீர் வைத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு கோவைக்காயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின் நறுக்கிய கோவைக்காயை இட்லி அவிப்பது போல் இட்லி சட்டியின் மேல்
    Advertisement
    பகுதியில் கோவக்காயை போட்டு நன்றாக அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அவித்த கோவைக்காய் தனியாக ஒரு பவுளில் எடுத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
  • பின் கோவக்காய் சூடு ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து திருதிருவன அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • எண்ணெய் நன்கு சூடேறியவுடன் நம் தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதையும் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கோவைக்காயுடன் சேர்த்து கொள்ளவும்.
  • பின் கோவைக்காயுடன் சேர்த்து போட்டு இப்பொழுது மையாக அரைத்து கொள்ளவும். அரைத்த சட்னி தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும் பின் அரைத்து வைத்திருக்கும் கோவைக்காய் சட்னியை இதனுடன் சேர்த்து கிளறி விடுங்கள்.
  • அதற்கு பின் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் சட்னி இனிதே தயார் ஆகிவிட்டது.

Nutrition

Serving: 5person | Carbohydrates: 7g | Protein: 2g | Sodium: 35mg | Fiber: 1g

English Overview: kovakkai chutney is one of the most important chutmey in south india. kovakkai chutney recipe or kovakkai chutney seivathu eppadi recipe or kovakkai chutney recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

8 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

9 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

10 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

12 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

14 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

15 மணி நேரங்கள் ago