- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலானோரின் வீட்டில் மதிய வேளையில் ஈசியா ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். சொல்லப்போனால் மதிய வேளைக்கு சிம்பிளா ஏதாவது செய்து வேலையை வேகமாக முடிக்க பார்ப்பார்கள். உங்கள் வீட்டிலும் அந்த நிலை தானா? மதிய வேளைக்கு சுவையாக அதே நேரத்தில் சட்டுன்னு என்ன செய்வது என்று தெரியாமல் தினமும் யோசிப்பீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு சாதம் செய்யுங்கள். இந்த கோவைக்காய் சாதத்தை 15 நிமிடத்தில் ஈஸியாக செய்யலாம்.
கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தால் பலவிதமான பலன்களை பெறலாம். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் ஆரோக்கியம் நிறைந்த கோவைக்காயில் சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான கோவைக்காய் பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
பின் கோவைக்காய் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பொடி செய்து 15 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
அதன்பிறகு சாதத்தை சேர்த்து நன்கு கலந்து, இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் பொடி சாதம் தயார்.






