- Advertisement -
Home ஆன்மிகம் பண வரவு அதிகரிக்க சொல்ல வேண்டிய குபேர மந்திரம்!!

பண வரவு அதிகரிக்க சொல்ல வேண்டிய குபேர மந்திரம்!!

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் செல்வ கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தையும் செல்வ கடாட்சத்தையும் நமக்கு கொடுக்கக் கூடியவர் தான் குபேரர். குபேரரை எளிமையாக வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை ஒரு லட்சத்து எட்டு முறை உச்சரிப்பதால் வாழ்க்கையில் பணக்கஷ்டம் இருக்காது. ஆனால் ஒரு நாளில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம்.

பணம் தரும் குபேர மந்திரம்

“ஓம் ருத்ர குபேர வசீகராய நம”

- Advertisement -

இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் காலை நேரத்தில் உச்சரிக்க வேண்டும். காலை எழுந்து முகம் கழுவி விட்டு கண்களை மூடி ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் போது பணம் நம்மை தேடி வருகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டே உச்சரிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த பிரபஞ்சத்தின் மூலம் உங்களுக்கு பணம் நிறைய சேர்ந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் 48 நாட்களுக்கும் சேர்த்து ஒரு லட்சத்து எட்டு முறை இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து வந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும்.

மந்திரத்தால் ஏற்படும் நன்மைகள்

இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் கடன் பிரச்சினைகள் தீரும். வறுமைகள் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும். வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும். பண வரவு சீராக தொடங்கும். முதல் நாளிலேயே உங்களுக்கு நன்மைகள் நடந்து விடாது தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் தான் உங்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும். நம்பிக்கையோடு இந்த ஒரு வரி மந்திரத்தை குபேர மந்திரத்தை உச்சரித்து அதற்கான பலன்களை பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!!