உங்களது வறுமை நீங்கி பணம் சேர்ந்து கொண்டே இருக்க இந்த ஒரு விளக்கு மட்டும் போதும்!

- Advertisement -

நம் வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி இருந்தாலும் இந்த ஒரு விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் ஏற்றி விட்டால் போதும் உங்களுக்கு இருக்கும் வறுமை பண கஷ்டம் என அனைத்தையும் நீக்கி உங்கள் வீட்டின் செல்வம் பெருகுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்த ஒரு விளக்கு செய்து தரும். அப்படிப்பட்ட ஒரு அதிசய விளக்கு தான் இது. அதனால் உங்கள் வீட்டில் உள்ள வறுமை, பணக்கஷ்டம், கடன் பிரச்சனை என அனைத்தையும் நீக்கும் அந்த விளக்கு என்ன அந்த விளக்கை எப்படி ஏற்றி வேண்டும் அதனால் வேறு என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என அனைத்தையும் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

-விளம்பரம்-

குபேரர்

பொதுவாக நமது வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் நம் மன நிம்மதிக்காகவும் அந்த பிரச்சனை விரைவில் சரியாக வேண்டும் என்பதற்காகவும் கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். அந்த வகையில் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் பொழுது எல்லாம் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்று வழி விடுவதை நம் காலகாலமாக செய்து வருகிறோம். அதேபோல் மகாலட்சுமிக்கு இணையான ஒரு கடவுளாக பார்க்கப்படுபவர் தான் குபேரர் மகாலட்சுமிக்கு சொந்தமான அனைத்து செல்வங்களையும் பாதுகாப்பவர். இவருக்கு நம்ம வியாழன் கிழமை தோறும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது நம் வீட்டில் உள்ள அனைத்து செல்வ வளங்களும் பெருகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

குபேர விளக்கு

அதனால் வாரத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த விளக்கை ஏற்றி குபேரரை வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நாம் பார்க்க போகிற பரிகாரம் ஒரு எளிமையான குபேரரை வழிபடும் பரிகாரம் தான். மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளக்கை தான் குபேர விளக்கு என்று சொல்லுவார்கள். இந்த குபேர விளக்கை நாம் வியாழன் கிழமை அன்று குபேரருடைய திரு உருவபடத்திற்கு முன்பு அல்லது குபேரரின் உருவ சிலைக்கு முன்பாக வைத்து சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தெய்வம் தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திரம்

இப்படி தீபம் ஏற்றி விட்டு குபேரருக்கு நாணயங்கள் என்றால் பிடிக்கும் அதனால் 108 ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து பூஜையறை வைத்துக் கொள்ளுங்கள். இந்த 108 ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் விளக்கேற்றும் போது குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பதிலாக எங்கள் குபேர நாணயம் என்று கடைகளில் கேட்டாலும் அவர்கள் கொடுப்பார்கள் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி குபேரருக்கு அர்ச்சனை செய்யும் போது “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம” என்ற இந்த லட்சுமி குபேர மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

பண வரவு அதிகரிக்கும்

ஆனால் குபேர தீபத்தை ஏற்றும்போது குபேர திசையான வடக்கு திசையில் ஏற்றி வைத்து பின் தான் 108 முறை நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். எப்படி நாம் ஒவ்வொரு முறையும் அர்ச்சனை செய்யும் போது. இந்த குபேர லட்சுமி மந்திரத்தை உச்சரிப்பதால் குபேர பகவானின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும் குபேர பகவானின் அருள் நமக்கு கிடைத்துவிட்டாலே போதும் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருளாதார சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். பணம் இல்லாத வீட்டில் பணம் சேரும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

-விளம்பரம்-

ஊறுகாய்

குபேரர் ஒரு ஊறுகாய் பிரியர் அதனால் வீட்டில் விதவிதமான ஊறுகாய் வைத்திருக்கலாம் குறிப்பாக நெல்லிக்காய் ஊறுகாய் குபேரருக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இந்த நெல்லிக்காய் ஊறுகாய் யார் யார் வீட்டில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுடைய வீட்டில் எல்லாம் வறுமை என்பது இருக்காது என்று சொல்வார்கள். அதனால் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டுடன் சிறிது நெல்லிக்காய் ஊறுகாயும் சேர்த்து சாப்பிட்டால். உங்கள் வீட்டில் செல்வங்களுக்கு பஞ்சமே இருக்காது மேலும் நெல்லிக்கனி என்பது மகாலட்சுமியின் ஒரு அம்சமாகும் அதனால் நெல்லிக்காய் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here