வெண்டைக்காய் வாங்கி அதுல வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் புளி பச்சடி வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு விதவிதமா செஞ்சு சாப்பிடுறீங்க ஆனா வெண்டைக்காய் வாங்கினால் ஒரு தடவை வேர்க்கடலை பொடி அரைத்து போட்டு முட்டை சேர்த்து இந்த சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவா பொரியல் செய்யும்போது நம்ம கடைசியா தேங்காய் துருவல் போடுவோம் அப்படி இல்லன்னா வேர்க்கடலை பொடி தூவி விடுவோம். அது எதுவும் இல்லாம பொரியல் சாப்பிடுவதற்கு கண்டிப்பா நல்லா இருக்காது ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா முட்டையும் வேர்க்கடலை பொடியும் சேர்த்து ஒரு சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் செய்ய போறோம்.
இந்த ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.கார குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் செஞ்சு பாருங்க. ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் குழந்தைகளுக்கு ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு இந்த வெண்டைக்காய் முட்டை பொரியல் செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி கொடுக்கலாம். பொதுவா வெண்டைக்காய் சாப்பிடாத குழந்தைகள் முட்டை பொரியல் அப்படின்னு நினைச்சு இந்த ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க கண்டிப்பா டிபன் பாக்ஸ காலி ஆக்கி தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு சூப்பரான பொரியல் செஞ்சு கொடுத்து அசத்தலாம்.
இந்த ருசியான சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் ரெசிப்பி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க. இந்த சுவையான சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் இந்த மாதிரி ஒரு தடவ செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குறவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவுமே குழந்தைகளுக்கு வித்தியாசமா செஞ்சு கொடுத்தாதான் உங்க விரும்பி சாப்பிடுவாங்க அந்த வகையில இந்த வித்தியாசமான பொரியல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வெண்டைக்காய் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெண்டைக்காய் முட்டை பொரியல் | Lady Finger Egg Poriyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி வெண்டைக்காய்
- 2 முட்டை
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 4 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் வேர்க்கடலை காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். கரம் மசாலா மல்லி தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து சுருள வரைக்கும் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் முட்டை பொரியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!