சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு அசைவம் அப்படின்னா அது சிக்கன் அப்படின்னு சொல்லலாம். என்னதான் மட்டன் மீன் நண்டு இறால் அப்படின்னு நிறைய அசைவம் இருந்தாலும் சிக்கன் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சிக்கன் வச்சு நீங்க நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி கிரில் சிக்கன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்லயே ஒரு சூப்பரான லேஸ் வச்சு செய்யக்கூடிய லேஸ் சிக்கன் தான் பார்க்க போறோம்.
நம்ம நார்மலா சிக்கன் பொரிக்கிறதுக்கு செய்ற மாதிரியே செஞ்சிட்டு முட்டையில நல்லா சிக்கன முக்கி எடுத்து லேஸை நொறுக்கி அதுல போட்டு சிக்கனை புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்தா ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிடும். இந்த ரெசிபி சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும் இந்த ருசியான டேஸ்ட்டான சிக்கன் ரெசிபியை வீட்ல இருக்கக்கூடிய எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். மாலை நேரத்துல டீ காபியோட இந்த சூப்பரான சிக்கன் ரெசிபியை வச்சு சாப்பிடலாம்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா உங்களுக்கு பிடித்த விருந்தாளிகள் வந்தா இந்த மாதிரி ரெசிபி செஞ்சு கொடுக்கலாம். கண்டிப்பா என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்க கூடிய குழந்தைகளுக்கு இந்த மாதிரி டிஃபரண்டான ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா அவங்க விரும்பி இது செய்யும் போது கொஞ்சம் நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க ஏன்னா கண்டிப்பா நீங்க செஞ்சு வச்ச உடனே சட்டு சட்டுன்னு காலியாகிவிடும். சிக்கன் வச்சு என்ன ரெசிபி செஞ்சாலும் டேஸ்ட் அட்டகாசமா தான் இருக்கும் அந்த வகையில் இந்த சிக்கன் ரெசிபியை நீங்க கண்டிப்பா செஞ்சு பாக்கணும். இப்ப வாங்க இந்த சுவையான லேஸ் சிக்கன் ரெசிபி எப்படி சூப்பரா மொறு மொறுன்னு செய்றதுன்னு பார்க்கலாம்.
லேஸ் சிக்கன் | Lays Chicken Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 லேஸ் பாக்கெட்
- 1/2 கி சிக்கன்
- 3 முட்டை
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா, மிளகுத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது முட்டை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு தட்டில் லேஸ் சேர்த்து கைகளாலேயே நொறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும்.
- ஊற வைத்த சிக்கனை முட்டையில் முக்கி எடுத்து லேஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான லேஸ் சிக்கன் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!