- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா நான்வெஜ் செய்யணும் அப்படினாலே அதுக்கு மசாலா அரைச்சு வெங்காயம் உரிச்சு வதக்கி அரைச்சு செய்யணும் அப்படின்னு ரொம்ப கடுப்பா இருக்கும். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை ஒன் பாட் சிம்பிளான சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் அருமையாக இருக்கும். இதுக்கு வீட்ல இருக்க கூடிய மசாலாக்களை போதுமானது எதையும் வதக்கி அரைக்கணும் அப்படி என்று அவசியமில்லை ஆனால் சூப்பரான ஒரு சிக்கன் தொக்கு 20 நிமிஷத்துல தயாராகிவிடும். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி நான் பரோட்டா அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை நீங்க சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறமா கஷ்டப்பட்டு எதையும் வதக்கி அரைச்சு சேர்க்காமல் இப்படியே செஞ்சிடுவீங்க. இதை ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க நைட்டு லேட்டா வீட்டுக்கு வந்தீங்கன்னா அப்போ சிக்கன் சாப்பிடணும் போல இருக்குன்னு வீட்ல யாராவது கேட்டாங்கன்னா சிக்கன் எடுத்துட்டு வந்து டக்குனு ஒரு 20 நிமிஷத்துல இந்த ரெசிபி எதுக்கு செஞ்சிடலாம்.
தக்காளி வெங்காயம் நறுக்குறதுக்கான நேரம் மட்டும்தான் மத்தபடி பெருசா இதுக்கு நிறைய நேரம் தேவைப்படாது. சுவையான இந்த சிக்கன் தொக்கு ரெசிபி எல்லாரோட ஃபேவரட் ஆகவும் மாறிவிடும். ரொம்ப ரொம்ப இந்த ரெசிபி டேஸ்டாக இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. இது வாங்க இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு பட்டை கிராம்பு நட்சத்திர சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா, மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிக்கனையும் சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் தொக்கு தயார்.






