சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

என்ன தான் நான் வெஜ் ஐட்டம்ல மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சதுனா சிக்கன் தான். சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செய்ய முடியும். சிக்கன் குருமா சிக்கன் சால்னா சிக்கன் ப்ரைட் ரைஸ் சிக்கன் குழம்பு கட்லெட் சிக்கன் பிரியாணி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம சிக்கன் கீமா தான் செய்ய போறோம். பரோட்டா, சப்பாத்தி இட்லி, தோசை,சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.

-விளம்பரம்-

பரோட்டா வீட்ல செய்ய தெரியாதவங்க கடைகளில் இருந்து வாங்கிட்டு வந்து சைடு டிஷ்ஷா இந்த சிக்கன் கீமா செஞ்சு ஜாலியா என்ஜாய் பண்ணலாம். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும். முக்கியமா சின்ன குழந்தைகளுக்கெல்லாம் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா சாப்பிடுவதற்கு ரொம்பவே ஈசியா இருக்கும். நான் சப்பாத்தி போன்ற ரெசிப்பீஸ் செஞ்சு அதுக்கு சைடுஷா எப்பவுமே ஒரே மாதிரியா பன்னீர் பட்டர் மசாலா செய்யாமல் இந்த மாதிரி சூப்பரான சிக்கன் கீமா செஞ்சு பாருங்க.

- Advertisement -

இந்த சிக்கன் கீமாக்கு சிக்கன் கொத்து கறி கடையிலேயே கேட்டா தருவாங்க. வாங்கிட்டு வந்து வீட்ல தான் இத கொத்தி எடுக்கணும் அப்படின்ற அவசியமில்லை. சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு ட்ரை பண்ணுங்க. கண்டிப்பா சமைக்கவே தெரியாது உங்க கூட சூப்பரா சமைச்சு விடலாம். இதுக்கு தக்காளி சேர்க்காமல் தயிர் இருக்கிறதால டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த சிக்கன் கீமா ரெசிபியை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

சிக்கன் கீமா | Chicken Keema Recipe In Tamil

என்ன தான் நான் வெஜ் ஐட்டம்ல மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சதுனா சிக்கன் தான். சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செய்ய முடியும். சிக்கன் குருமா சிக்கன் சால்னா சிக்கன் ப்ரைட் ரைஸ் சிக்கன் குழம்பு கட்லெட் சிக்கன் பிரியாணி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம சிக்கன் கீமா தான் செய்ய போறோம். பரோட்டா, சப்பாத்தி இட்லி, தோசை,சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். பரோட்டா வீட்ல செய்ய தெரியாதவங்க கடைகளில் இருந்து வாங்கிட்டு வந்து சைடு டிஷ்ஷா இந்த சிக்கன் கீமா செஞ்சு ஜாலியா என்ஜாய் பண்ணலாம். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும். முக்கியமா சின்ன குழந்தைகளுக்கெல்லாம் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா சாப்பிடுவதற்கு ரொம்பவே ஈசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Keyword: Chicken Keema
Yield: 4 People
Calories: 150kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன் கொத்துக்கறி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை, கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1/2 கப் தயிர்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிக்கன் மசாலா சேர்த்து உப்பு சேர்த்து வதக்கிய பிறகு கொத்து கறியையும் சேர்த்து வதக்கவும். தயிர் சேர்த்து நன்றாக கலந்து வேக வைக்கவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கீமா ரெசிபி தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 150kcal | Carbohydrates: 2.9g | Protein: 14g | Fat: 3g | Sodium: 144mg | Potassium: 226mg | Fiber: 18g | Vitamin C: 134mg | Calcium: 17mg | Iron: 8.3mg

இதனையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!!!