- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சைவமோ, அசைவமோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர் சாதம். அசைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் சிக்கன் அல்லது மீன் வறுவலும் செம்ம காமினேசன். அதே போல, சைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் உருளைக்கிழங்கு வறுவல் அல்லது ஊறுகாயும் அட்டகாசமான காமினேசன். தயிர் சாதத்தின் எளிமை செரிமான அமைப்பை எளிதாக்குகிறது. இது ஒரு இலகுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாகும். மேலும் இது செரிமான பிரச்சனைகள் அல்லது நோயிலிருந்து மீண்டு வருபவர்களை தவிர மற்ற அனைவருக்கும் ஏற்றது.
சாமை மில்லட் வகையைச் சேர்ந்த அரசி வகை இது. சாதாரண அரிசி போலே இதிலும் புலாவ், பொங்கல், வெரைட்டி ரைஸ் எல்லாம் செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியமானது. தற்போது இந்த சாமை அரிசி கொண்டு தயிர் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் நாம் காணலாம். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை.
சொல்லப்போனால் சாமையை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது சாமை தயிர் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம். வீட்டில் நாம் வித விதமாக வித்தியாசமாக சாதம், தொட்டுக்கை என்று செய்து கொடுத்தாலும் தயிர் சாதத்திற்கும், வறுவலுக்கும் ஈடு இணையே கிடையாது என்று சொல்லலாம். குழந்தைகளுக்கு தயிர் சாதத்தை இந்த ஸ்டைலில் செய்து கொடுங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட இல்லாத அளவிற்கு சாப்பிட்டு முடிப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான சாமை உப்புமா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் சாமை அரிசியை நன்கு அலசி தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் அரிசியை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தயிர் மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சாதத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் தயிர், சாதம், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மாதுளை முத்துக்களை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், முந்திரி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் சாதத்துடன் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாமை தயிர் சாதம் தயார். இதற்கு உருளைக்கிழங்கு வறுவல், மாங்காய் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.






