நாம் சொந்த வீட்டில் குடியிருந்தாலும் சரி வாடகை வீட்டில் இருந்தாலும் சரி வாஸ்து தோஷத்தால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். அந்த வாஸ்து தோஷத்தை சரி செய்ய முடியாத சூழலில் விநாயகரை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது அதனை பற்றி இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம்.

வாஸ்து தோஷம்
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது எந்த ரூபத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் கூறவே முடியாது. இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் கடன் பிரச்சினைகள் என நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கூட வீட்டில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம் எனவே வாஸ்து தோஷத்தை நீக்குவது மிகவும் சிறந்தது.
வாஸ்து தோஷத்தை நீக்கும் மஞ்சள் பிள்ளையார்
வீட்டில் எந்த இடத்தில் வாஸ்து தோஷம் இருக்கிறது என்பதை வாஸ்து நிபுணர் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த இடத்தை இந்த பரிகாரத்திற்கு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாழை இலை அல்லது வெற்றிலை எடுத்து அதில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து அருகம்புல் வைத்து வாஸ்து தோஷம் உள்ள இடத்தில் அந்த பிள்ளையாரை வைக்க வேண்டும். வாஸ்து தோஷத்தால் எந்த பாதிப்பும் வராது. பிள்ளையாரை எந்த மூலையில் வேண்டுமானாலும் எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் வைக்கலாம். விநாயகருக்கு எந்த தோஷமும் கிடையாது வாரத்தில் ஒரு முறை இதை செய்துவிட்டு அடுத்த வாரம் அதே கிழமையில் பழைய பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் புதுப்பிள்ளையாரை அந்த இடத்தில் வைக்க வேண்டும். தினமும் அந்த பிள்ளையாருக்கு ஊதுவத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு “பிள்ளையாரே துணை பிள்ளையாரே துணை பிள்ளையாரே துணை” என்று மூன்று முறை கூறவேண்டும். வாழ்க்கையில் இருக்கக் கூடிய பெரிய தோஷங்கள் கூட நீங்கிவிடும் நம்பிக்கையோடு இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் படிப்பதற்கு விநாயகர் பரிகாரம்


