ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்தும் பொழுது தான் நாம் அதனை சரியாகப் புரிந்து கணித்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் தரப்போகிறது. இந்த மாற்றம் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மகரம்

மார்ச் 2026, மகர ராசிக்காரர்களுக்கு வேறு எந்த மாதத்தையும் விட உங்க தொழில் வாழ்க்கையின் 10வது வீட்டைச் செயல்படுத்துகிறது. உங்கள் ராசி அதிபதியான சனிபகவான், நீண்டகால தொழில்முறை இலக்குகளை ஆதரிக்கிறது. இந்த காலகட்டமானது தொழில் ரீதியாக புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளப் போகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுலாம். இந்த மாதத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற சலுகைகள் தேடிவரும். வேலையில் உங்களுக்கு சங்கடம் கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.
மேஷம்

உங்கள் ராசியில் சனிபகவான் வருடம் முழுவதும் இருப்பதால், உங்களின் முயற்சிக்கான பலன்கள் மார்ச் மாதம் வரப்போகிறது. மார்ச் 20 அன்று சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார், இது உங்கள் தன்னம்பிக்கையையும், நற்பெயரையும் அதிகரிக்கப் போகிறது. நீண்ட நாட்கள் ஒரு சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கப் போகிறது. வேலையில்லாதவர்கள் இந்த கலாட்டத்தில் உங்களுக்கு தகுதியான வேலையைப் பெறலாம். இந்த மாதம் துணிந்து முடிவெடுப்பது உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளைக் கொடுக்கும்.
சிம்மம்

மார்ச் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கக் கூடிய ஒரு நிலை உருவாகும். இந்த மாதம் உங்களின் தலைமைப்பண்பு அதிகரிக்கலாம். மார்ச் 25 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. உங்களின் இலக்குகளை அடையும் முயற்சியில் நீங்கள் இப்போது மிகவும் வேகமாக முன்னேறுவீர்கள். அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. புதிய பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாடு பயணம் உங்களுக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும்.
விருச்சிகம்

மார்ச் மாதம் உங்களின் 8வது வீட்டில் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இது உங்களுக்கு புதிய சொத்துக்களையும், செல்வத்தையும் குவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் திறப்பதால் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும். கூட்டு தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் அமையப் போகிறது. உடல் நிலைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நேர்மறையான சிந்தனை மனதில் தோன்றும். குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் உங்கள் மூலமாக எடுக்கப்படும்.
இதனையும் படியுங்கள் : கும்பத்தில் சூரிய பகவான் 2026


