- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மதுரை மல்லிகை பூவுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் மட்டுமில்லாமல் அசைவத்துக்கும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ். மதுரையில எந்த ஹோட்டல் போனாலும் உங்களுக்கு சுட சுட உணவுகள் தரமா சூப்பரா கிடைக்கும். மதுரை ஸ்பெஷல் ஆன அசைவ உணவுகள் நிறைய இருக்கு அதுல மட்டன் சுக்கா ரொம்ப ஃபேமஸ் பரோட்டாவும் ரொம்ப ரொம்ப பேமஸ். அந்த வகையில மதுரை ஸ்பெஷல் சூப்பரான பெப்பர் சிக்கன் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க சுட சுட சாதத்துக்கு ஒரு அல்டிமேட் ஆன காம்பினேஷன் ஆக இருக்கும்.
சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இதுக்கு நம்ம சின்ன வெங்காயம் அறுத்து சேர்க்க போறோம் அதுதான் இதுல ஹைலைட்டே. எண்ணெய் பிரிஞ்சு வர வரைக்கும் நல்லா வதக்கி இந்த ரெசிபியை செய்யும்போது அவ்ளோ ருசியாக இருக்கும். இதுல மிளகுத்தூள் அதிகமா சேர்த்து செய்யும்போது சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் கூட சரியாகிவிடும் மாத்திரை எதுவுமே போட தேவையில்லை. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி இது.
கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க தக்காளி கூட சேர்க்க தேவையில்லை. சின்ன வெங்காயம் அரைச்சு சேர்ந்தாலே நல்லா கெட்டியா கிரேவி பதத்துக்கு அருமையா இருக்கும் கடைசியாக கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாம் சேர்த்து இறக்கும்போது மணக்கும் மணக்க எண்ணெய் மிதக்க ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிவிடும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான மதுரை ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மதுரை மட்டன் கறி தோசை எப்படி செய்வது ? மதுரை சிம்மக்கல் கோனார் கடையில் பெறப்பட்ட ரெசிபி!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைத்து மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மதுரை ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.






