வீட்டில் பணம் தடையில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்க! பெண்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

நம் வீட்டில் நாம் சேர்த்து வைக்க ஆசைப்படும் பணம், தங்கம், சொத்துக்கள் என அனைத்திற்கும் சொந்தக்காரி என்றால் அது மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயார் பூரண அருள் நமக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பணம் ஐஸ்வரியங்கள் சொத்து சுகங்கள் என எதையும் நாம் தேடி போக வேண்டியதில்லை, அதுவே நம்மை தேடி வரும் இவை எல்லாம் நமக்கு வேண்டும் என்றால் முதலில் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். நம் வீட்டுப் பெண்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டு சில வழிமுறைகளை செய்து வந்தாலே போதும் நமது வீட்டில் தானாகவே செல்வங்கள் சேர ஆரம்பித்து விடும். அப்படி நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

லட்சுமி கடாட்சம் உண்டாக

எக்காரணம் கொண்டும் வெள்ளிக்கிழமை அன்று பணம் கடன் கொடுக்கக் கூடாது. அதனுடன் அரிசி வறுப்பது, புடைப்பது போன்ற விஷயங்களையும் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமை தினத்தில் வீட்டிற்கு உப்பு வாங்குவதால் அதிர்ஷ்டத்தையும் உங்களின் வீட்டிற்கு கொண்டு வந்து செல்வங்களை பெருக்கும்.

- Advertisement -

காலையில் பிரம்ம முகூர்த்த நேரம் வருவதற்கு முன்பாகவே நாம் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும் ஏனென்றால் தேவர்கள்,பித்ருக்களும் நமது வீடு தேடி வருவார்கள். இந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது.

வீட்டு பெண்கள் காலையில் வீட்டு கதவை திறக்கும் போது மகாலட்சுமி வருக என்று மூன்று முறை சொல்லி கொண்டே கதவை திறக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் பெண்கள் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமை அன்று எண்ணெய் வைத்து குளிக்க கூடாது.

-விளம்பரம்-

அதுபோல காலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் நம் வீட்டு வாசலை கூட்டி, தெளித்து அரிசி மாவினால் கோலம் போட்டு இந்த வேலைகளை முடிக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு தாராளமாக கிடைக்கும்.

இரவு நேரங்களில் பால் தயிர் காய்கறிகள் போன்றவற்றை கடன் வாங்குவதையும் கடன் கொடுப்பதையும் தவிர்த்து கொள்ளுங்கள்

வீட்டில் எப்போதும் குங்குமம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் குங்குமம் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு கொடுப்பதற்கு முன்பாக அவர்களும் வைத்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்கும், பூ ஆகியவற்றை கொடுக்கலாம். நீங்கள் ரவிக்கை துணியும் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் அதனுடன் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொடுங்கள்.

வீட்டில் காலை மாலை என இரு வேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மாலையை இருட்டுவதற்கு முன்பாகவே விளக்கு ஏற்றி விடும் என்றும் விளக்கேற்றிய பின் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லவும், தலை சீவ, பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. முக்கியமாக விளக்கேற்றிய பிறகு நம் வீட்டு குப்பையை வெளியே எடுத்துச் சொல்லக் கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here