- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- LUNCH
சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக அசைவ சாப்பாடு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஜீவிகளை பார்ப்பது அரிதான விஷயம். காலை, மதியம், இரவு என மூன்று நேரம் பிரியாணி கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம். பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான Taste-ல் இருக்கும்.
அந்தவகையில், மீனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் காணலாம். சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி போல் ஃபிஷ் பிரியாணியை செய்ய முடியாது ஏனெனில் சிக்கன் மட்டனை விட மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை அப்படியே பின்பற்றி செய்தால் மீன் குழையாமல் உடையாமல் முழுமையாக அட்டகாசமாக இருக்கும். மலபார் மீன் பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் மீனை நன்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அலசி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் மீனில் நன்றாக இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை சேர்த்து முக்கால் பாகம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அரிசியை நன்கு கழுவி விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் சாதத்தை வடித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
பின் தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தனியா தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் வேக வைத்த அரிசியை பாதியளவு போட்டு அதன் நடுவில் மீன் மற்றும் புதினா கொத்தமல்லி இலைகளை தூவவும். இப்படி இரண்டு முறை செய்யவும்.
பின் பாத்திரத்தை மூடி தம் போட்டு, குறைந்த தீயில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மலபார் மீன் பிரியாணி தயார்.






