பொதுவா பன்னீர் ரெசிப்பிஸ் எல்லாமே ரெஸ்டாரண்ட்ல தான் சூப்பரா இருக்கும் அப்படின்னு நம்ம நினைச்சுட்டு இருப்போம். ஆனா நம்ம வீட்லையே பன்னீர் ரெசிப்பிஸ் எல்லாமே சூப்பரா ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்ய முடியும். அந்த வகையில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மலாய் பன்னீர் எப்படி செய்றதுன்னு இப்ப பார்க்கலாம். பன்னீர் வச்சு செய்யக்கூடிய நிறைய ரெசிபிஸ் ட்ரை பண்ணி பார்த்திருப்பிங்க ஆனா மலாய் பன்னீர் மட்டும் வீட்ல செய்யறதுக்கு கொஞ்சம் பயமாக இருக்கும் ஆனால் பயப்பட வேண்டியதில்லை இதே மாதிரி செய்முறையில் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க.
அதுக்கப்புறம் ரெஸ்டாரன்ட் பக்கமே போக மாட்டீங்க வீட்லையே சூப்பரா செஞ்சுடுவீங்க. இதுக்கு நம்ம பிரஷ் கிரீம் வெள்ளை மிளகு தூள் இதுதான் கடையில போய் வாங்க வேண்டியதாக இருக்கும். மத்தபடி மற்ற பொருட்கள் எல்லாமே வீட்லயே இருக்கும். அதனால சூப்பரான மலாய் பன்னீர் ரெசிபி இனிமேல் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க. சாப்பிடுவதற்கும் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை சப்பாத்தி நான் பரோட்டா போன்றவைகளோட சேர்த்து சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இதை செய்றது ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது ரொம்ப ரொம்ப ஈசி. ஈஸியான இந்த ரெசிபியும் ரொம்ப கஷ்டம் அப்டினு நினைச்சுக்கிட்டு இனிமேல் கடையில் போய் வாங்க தேவை இல்லை. வீட்டிலேயே சூப்பரா செய்யலாம். பஞ்சாப்ல தான் இந்த மலாய் பன்னீர் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் ஆனா இப்போ எல்லா இடத்துலயுமே இது கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு எல்லாரும் சாப்பிட்டும் பழகியாச்சு. அதனால இந்த டேஸ்ட்டுக்கு இனிமேல் வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க.இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான மலாய் பன்னீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
மலாய் பன்னீர் | Malai Paneer Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி பன்னீர்
- 1 டீஸ்பூன் வெள்ளை மிளகு தூள்
- 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 டீஸ்பூன் தேன்
- 2 டேபிள் ஸ்பூன் பிரெஷ் க்ரீம்
- 1/4 கப் பால்
- 7 முந்திரி பருப்பு
- 3 பெரிய வெங்காயம்
- 1 பட்டை, ஏலக்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1 பிரியாணி இலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டேபிள் ஸ்பூன் இனிப்பில்லாத பால்கோவா
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது அரைத்த விழுது சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- வெள்ளை மிளகு தூள் உப்பு கஸ்தூரி மேத்தி தேன் சேர்த்து கலக்கவும்.
- ஏலக்காய் தூள் பிரஷ் கிரீம் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் வேக வைத்து பிறகு பன்னீரை சேர்த்து பன்னீர் வெந்ததும் இறக்கினால் சுவையான மலாய் பன்னீர் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!