- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மணப்பட்டி மட்டன் சுக்கா எப்படி பேமஸோ அதே மாதிரி மணப்பட்டி சிக்கன் சுக்காவும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ். வெங்காயம் தக்காளியே இல்லாமல் இந்த சூப்பரான ரெசிபியை சட்டுனு செஞ்சிடலாம். இதுக்கு சீரகத்தூள் அதிகமா சேர்க்கணும். அது தான் இதுக்கு ஹைலைட்டே. இந்த சூப்பரான ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல செஞ்சு பாருங்க இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுட சுட சாதம் போட்டு அதில் இந்த சிக்கா போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும் ரசம் சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனாக இருக்கும்.
அதனால மிஸ் பண்ணாம கண்டிப்பா வீட்ல ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் எக்ஸ்ட்ரா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. இந்த மணப்பட்டி நெய் சிக்கன் சுக்காவுக்கு நெய் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படும் கடைசியா முந்திரி பருப்பு கருவேப்பிலை எல்லாம் சேர்த்து இறக்கும் போது நல்ல வாசனையோடு பார்க்கும் போதே சாப்பிடனும் போல தோணும் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான மணப்பட்டி நெய் சிக்கன் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!
Ingredients
Method
ஒரு கடாயில் சிக்கனை சேர்த்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மிளகாய் தூள் மஞ்சள் தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இடித்த இஞ்சி இடித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து நெய்யிலேயே நன்றாக சுருள சுருள வதக்கவும்.
இறுதியாக கருவேப்பிலை முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மணப்பட்டி நெய் சிக்கன் சுக்கா தயார்.






