- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
மாங்காய் தொக்கு இப்படி செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்று எல்லா சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இதை செய்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். அதுமட்டும் அல்லாமல்
இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான தேங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!
இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் அதிக அளவில் விற்கப்படும். குறைந்த விலையிலும் கிடைக்கும். அதனால் இது போன்று செய்து வைத்துகொள்ளுங்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் மாங்காயை நன்கு கழுவி துருவிக்கொள்ளவும்.
அடுத்து வறுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் துருவிய மாங்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.
மாங்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை நிறுத்தவும்.






