- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Drinks
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ் ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற லீவு விட்டாச்சு அதனால குழந்தைகள் வீட்டில் ஏதாவது இருப்பாங்க. வீட்ல குழந்தைகள் இருக்கிறதால ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சு கொடுங்க.
அந்த வகையில இந்த கோடை காலத்தில் ரொம்ப ரொம்ப பேமஸ் இருக்கக்கூடிய மாம்பழம் வைத்து ஒரு சூப்பரான மேங்கோ மஸ்தானி ரெசிபி செய்யப் போறோம். இதுல நட்ஸ் வகைகள் டூட்டி ஃபுருட்டி நறுக்கிய மாம்பழ துண்டுகள் ஐஸ்கிரீம் இது எல்லாமே சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த வெயிலுக்கு நல்ல ஜில்லுனு சாப்பிடும் போது அவ்வளவு குளு குளுன்னு இருக்கும். அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்லையே செஞ்சி ரசிச்சு ருசிச்சு குடிச்சு பாருங்க.
மாம்பழம் ரொம்ப பிடிக்கும்னா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். கடைகளில் போய் அது இதுன்னு குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காமல் இந்த மாதிரி வீட்டிலேயே செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல மாம்பழம் நிறைய இருக்கு அது எப்படி காலி பண்றதுன்னு தெரியலனா இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சிடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழம் வைத்து செய்யக்கூடிய மேங்கோ மஸ்தானி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!
Ingredients
Method
மிக்ஸி ஜாரில் ஒரு மாம்பழத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பரிமாறப்போகும் ஒரு பெரிய டம்ளரில் அரைத்த விழுது நறுக்கிய மாம்பழம் ஐஸ்கிரீம் அதன் மேல் அரைத்த விழுது அதன்மேல் பொடியாக்கிய நட்ஸ் வகைகள் டூட்டி ஃபுரூட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான மேங்கோ மஸ்தானி தயார்.






