சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இதமா சுவையான மாம்பழ ரோஸ் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த மாம்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். பழங்கள் விஷயத்தில் இது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை.

-விளம்பரம்-

இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.

- Advertisement -

அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் இந்த பழம் நல்ல உதவும். மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மாம்பழம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

Print
4 from 1 vote

மாம்பழ ரோஸ் மில்க் ஷேக் | Mango Rose Milk Shake Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த மாம்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். பழங்கள் விஷயத்தில் இது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Mango Rose Milk Shake
Yield: 3 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கண்ணாடி டம்ளர்

தேவையான பொருட்கள்

  • 2 மாம்பழம்
  • 1/2 கப் ரோஜா இதழ்கள்
  • 1/2 கப் சர்க்கரை
  • 3 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 கப் முந்திரி, பாதாம்
  • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு, தோல் சீவி, விதையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
  • ஒரு‌ மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், ரோஜா இதழ்கள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ‌காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.
  • பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
  • டம்ளரின் மேல் சிறிதளவு பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள், ரோஜா இதழ்களையும் சேர்த்து அலங்கரித்து பிறகு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான மாம்பழ ரோஸ் மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 99kcal | Carbohydrates: 5.2g | Protein: 4.1g | Fat: 1.6g | Sodium: 26mg | Potassium: 27mg | Fiber: 2.6g | Sugar: 2.9g | Vitamin A: 54IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான சம்மர் ரெசிபி வீட்டிலயே ரெம்ப ஈஸியாக செய்யலாம் மாம்பழ கஸ்டர்ட் இப்படி ட்ரை பண்ண பாருங்க!