- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாக மரவள்ளிக்கிழங்கு இட்லி பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் இட்லி தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். நாம் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை மாவு ஃபிரிட்ஜில் இருக்கும். அதைத்தான் எப்போதும் பயன்படுத்துவோம். ஒருவேளை மாவு தீர்ந்துவிட்டால் அன்று உப்புமா தான் அனைவருக்கும். மாவு தீர்ந்தால் கூட தோசை செய்யலாம் அதுவும் இன்ஸ்டண்டா என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த இன்ஸ்டண்ட் மரவள்ளிக்கிழங்கு இட்லி எப்படி செய்வது தெரிந்துகொள்ளலாம். மரவள்ளிக்கிழங்கு என்பது நம் ஊர்களில் குறிப்பிட்ட சீசனுக்கு கிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும். எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இதை வைத்து இட்லி செய்ய முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு நாம் மரவள்ளிக்கிழங்கு இட்லி செய்து கொடுக்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் நன்கு தண்ணீரில் அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் மரவள்ளிகிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் கிரைண்டரில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் மரவள்ளி துண்டுகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்து வைத்துள்ள மாவில் உப்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு விழுதை சேர்த்து நன்கு கலந்து இதனை ஆறு மணி நேரம் வெளியே வைத்து புளிக்க விடவும்.
பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தட்டில் மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு இட்லி தயார்.






