- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
பொதுவான வீட்ல பன்னீர் ரெசிப்பி செய்யணும் அப்படின்னா அதுக்கு வினிகர் மட்டும் ஊத்தி பன்னீர் எடுத்துடுவோம். அப்படி இல்லனா எலுமிச்சை சாறு சேர்த்து பன்னீர் எடுப்போம் ஆனால் எப்பவுமே வெறும் பன்னீர் மட்டும் எடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை மசாலா பன்னீர் செஞ்சு வச்சுக்கிட்டீங்க அப்படின்னா ஒரு வாரத்துக்கு பிரிட்ஜுக்குள்ள வச்சு ஸ்டோர் பண்ணி நம்ம பன்னீர் வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபீஸுக்கும் இந்த மசாலா பன்னீர் வச்சு செஞ்சா அவ்ளோ சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த பன்னீரை அப்படியே டோஸ்ட் செஞ்சு குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கோ இல்ல ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கோ அவங்களுக்கு கொடுத்து விடலாம்.
டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும் இதுல நம்ம காரத்துக்கு மிளகுத்தூள் சேர்க்கிறதால குழந்தைகளுக்கு கொடுத்து விடும்போது எந்த ஒரு மசாலாவும் சேர்க்க தேவை இல்லை அப்படியே இதுல டோஸ்ட் செஞ்சு கொடுக்கலாம். இல்லனா இதை பன்னீர் பிரியாணி பன்னீர் பிரைட் ரைஸ் எல்லாத்துக்குமே பயன்படுத்திக்கலாம் இதை பயன்படுத்தி செய்றப்போ சாதாரண பன்னீரை விட இது ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த பன்னீரை வைத்து சூப்பரான பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் பிரியாணி பன்னீர் பிரைட் ரைஸ் பாலக் பன்னீர், பன்னீர் டோஸ்ட் என எல்லாமே செய்யலாம்.
இதுல கொத்தமல்லி இலைகள் வெங்காயத்தாள் சீரகத்தூள் மிளகுத்தூள் எல்லாமே சேர்த்து இருக்கிறதால டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். கடைகளில் கிடைக்கக்கூடிய பன்னீரை விட இந்த பன்னீர் ரொம்பவே சாஃப்டா ஜூஸியா இருக்கும். அதனால பால் உங்ககிட்ட அதிகமா இருந்துச்சுன்னா இந்த மசாலா பன்னீர் ரெசிபியை கண்டிப்பா செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க. கண்டிப்பா உங்களுக்கு இது பயன்படுகிற வகையில் இருக்கும். இப்ப வாங்க இந்த மசாலா பன்னீர் ரெசிபியை ரொம்ப ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சூப்பரான பன்னீர் சில்லி ப்ரை இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
இரண்டு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து லேசாக காய்ச்சி கொள்ளவும்.
பிறகு அதில் இடித்த மல்லி விதைகள் சீரகம், சீரகப்பொடி மிளகு பொடி வெங்காயத்தாள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு வினிகரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் திரிந்து வரும்.
இப்பொழுது அதனை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நல்ல தண்ணீரால் இரண்டு முறை கழுவி பிழிந்து ஏதாவது ஒரு பொருளை மேலே வைத்து கொள்ளவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் மசாலா பன்னீர் தயார்.






