- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் எப்போதும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு ஆரோக்கியமான மசாலா பொங்கல் செய்து கொடுங்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் ரவையில் அதிகம் உள்ளன. உங்கள் காலை உணவை மிகவும் சுவையான உணவாக மாற்ற இந்த மசாலா பொங்கலை ஒரு முறை செய்து பாருங்கள்.
இப்படி ஒரு தடவை நீங்கள் மசாலா பொங்கல் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த மசாலா பொங்கல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா பொங்கல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு சுவையான கார முட்டை தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரில் கோதுமை ரவா மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் மிளகு, கிராம்பு, சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் நாம் வேகவைத்த ரவாவை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் நன்கு வேக விடவும். அதன்பிறகு நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மசாலா பொங்கல் தயார்.






