- Advertisement -
அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுட சுட மீன் ப்ரைடு ரைஸ் இப்படி செய்து பாருங்க! வாழ்க்கைல மறக்க மாட்டிங்க இதன் சுவையை!
- Advertisement -
செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. மீனும் காலியாகிவிடும், சாதமும் காலியாகிவிடும். இந்த மத்தி மீன் வறுவல் சுலபமாக எப்படி சுவையாக செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
மத்தி மீன் வறுவல் | Mathi Fish Fry Recipe In Tamil
அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. மீனும் காலியாகிவிடும், சாதமும் காலியாகிவிடும்.
Yield: 4 people
Calories: 89kcal
Equipment
- கடாய்
- பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ மத்தி மீன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
- உப்பு தேவையான அளவு
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ எலுமிச்சை பழம்
செய்முறை
- முதலில் மத்தி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பிறகு மீனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கிளறி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
- மீன் ½ மணி நேரம் ஊறியதும் ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீன் துண்டுகளை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- இப்பொழுது ருசியான பொறித்த மத்தி மீன் தயார்.
Nutrition
Serving: 400 G | Calories: 89kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Saturated Fat: 0.7g | Potassium: 372mg