மேஷம்

சிலர் வாரத்தின் முற்பகுதியில் விருந்து உபசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுக்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். உங்கள் நேர்மறையான பேச்சின் மூலம் பிறரை கவருவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதில் உள்ள தடைகள் நீங்கும்.
ரிஷபம்

இந்த வாரம் சிலருக்கு தொழிலில் சற்று தேக்க நிலை காணப்படும். எனினும் உங்கள் திறமையினால் அதை சிறப்பாக கையாளுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் உயரும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
மிதுனம்

கடந்த வாரம் இருந்த சொத்து பிரச்சனைகளுக்கு இந்த வாரம் நல்ல முடிவு ஏற்படும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் அடைவீர். அரசுவழி முயற்சி சாதகமாம். வியாபாரம், தொழிலில் லாபம் கூடும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல்நிலையில் இருந்த பிரச்னை விலகி சிறப்பாக செயல்படுவீர். வாரத்தின் பிற்பகுதியில் துணையுடன் ஏதாவது ஒரு தவறான புரிதல் ஏற்படலாம். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தொழிலை விரிவுப்படுத்தும் திட்டம் பலனளிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
கடகம்

இந்த வாரம் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். செல்வாக்கை அதிகரிப்பார். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சிலருக்கு வழக்கமான வேலைகளிலும் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மனம் குழப்பமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும்.தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகி வருபவர்கள் விரும்பிய பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.
சிம்மம்

இந்த வாரம் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் பெறக்கூடிய வாரமாக அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி

இந்த வாரம் உங்களுக்கு உடல்நிலை சீராகும். துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொண்டு ஆதாயம் அடைவீர். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்ய கேட்டிருந்த பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. வீட்டில் மகிழ்ச்சியும், புதிய நிலம், வீடு வாங்குவது தொடர்பான வேலைகள் சிறப்பான முன்னேற்றம் அடையும்.
துலாம்

இந்த வாரம் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலைகள் நடக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். தொழில் தொடர்பான பயணங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் நீண்ட கால பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்

இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள போராட்டம் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். அரசுவழி வேலை சாதகமாகும். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் ஈடுபடும் வேலை லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல நினைப்பவருக்கு நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு

இந்த வாரம் பெரிய மனிதர்களின் தொடர்பால் உங்கள் வேலை நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் நீண்ட கால பிரச்சனைகள் தீரும். உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தடைபட்ட வேலை எல்லாம் இனி நடக்கும். வருமானமும், செல்வாக்கும் அதிகரிக்கும். பல நாட்கள் தடைப்பட்ட வேலைகளை முடிக்க வாய்ப்பு உண்டு. திட்டமிட்ட வேலைகள் சரியான திசையில் நகரும். புதிய சொத்து வாங்குவதில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
மகரம்

இந்த வாரம் அரசுவழி வேலைகளில் எச்சரிக்கைத் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் ஆலோசனைகளின் படி செயல்படுவது நல்லது. செயல்களில் நிதானம் தேவை. எதிரிகளின் தொல்லையுடன் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். சுமூகமாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவும் அவருடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்

இந்த வாரம் எந்தவொரு பிரச்னையையும் எளிதாக சமாளிப்பீர். உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி விலகும் காலம் ஆரம்பமாகி விட்டது. நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நேர்மறையான சிந்தனையும் ஆற்றலும் நிறைந்திருக்கும். வியாபாரம் விருத்தியாகும். வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் மூலம் மிகச் சிறப்பான பலனை பெறுவீர்கள். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கும் வேலை முடிக்க வாய்ப்பு உண்டு.
மீனம்

இந்த வாரம் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செலவு கட்டுப்படும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலவீனம் அடைவர். பயணங்கள் உங்களுக்கு அனுகூலத்தையும், ஊக்கம் அளிப்பதாகவும் அமையும். வாரத்தின் நடுவில் ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் மோசமான பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!


