வார ராசிபலன் 18 மே 2025 முதல் 24 மே 2025 வரை!!

- Advertisement -

மேஷம்

இந்த வாரம் பிரிந்த உறவுகள் நாடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பண வரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிலவும்.அரசு பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா செல்வர். சிலருக்கு செயல்களில் தடுமாற்றம் பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்துகளில் பிரச்னை எற்படும். எதிர்பாலினரால் லாபம் உண்டாகும். முதலீடு லாபமாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொன் பொருள் சேரும். தடைபட்ட வேலை நடக்கும்.

-விளம்பரம்-

ரிஷபம்

இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயரும். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தினரின் சட்டதிட்டங்கள் நிம்மதி அளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு தேர்வு சம்பந்தமான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொள்வர். முடங்கிய தொழில் மீண்டும் லாபத்தை நோக்கிச் செல்லும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நினைத்த செயல் நடக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது. மன நிம்மதி உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்

இந்த வாரம் சமூக காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவி வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள். சிலருக்கு செலவு அதிகரிக்கும். சிறிய வேலைகளை முடிக்கவும் சிரமம் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

கடகம்

இந்த வாரம் புதிய நண்பர்களின் தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவு உண்டு. சமூக விவகாரங்களில் கவனம் தேவை. தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்புக்கான ஆலோசனைகளை தேடிப்பெற வேண்டும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். ஒருசிலர் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பொருளாதார நிலை உயரும். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேறு ஊருக்கு சென்று தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வார்கள். கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஒருசிலர் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நண்பர்களால் லாபம் கூடும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

-விளம்பரம்-

கன்னி

இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு முக்கியமான இடத்தை பிடிப்பர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வர். இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட வருமானம் வரும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வேலைத்தேடியவர்களுக்கு கனவு நனவாகும்.

துலாம்

இந்த வாரம் உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதாரம் மன நிம்மதி தரும். மனைவி வழி சொந்தங்களை அனுசரித்து செல்லவும். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் பல நன்மைகளைப் பெற்று உற்சாகம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை தேடிப் பெற வேண்டும். நினைத்த வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். புதிய வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்.

விருச்சிகம்

இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகி உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை உயரும். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கப் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது விஷயங்களை அறிந்து கொள்வர். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்ப நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பண வரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

-விளம்பரம்-

தனுசு

இந்த வாரம் பல நன்மைகளைப் பெறுவர். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் மனதிடம் ஏற்படும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேற்படிப்பு குறித்த நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள். சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். மனம் தெளிவாகும். தெய்வபலம் கூடும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நினைத்த வேலை நடக்கும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சி சாதகமாகும்.

மகரம்

இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். செலவுகளை திறமையாகச் சமாளித்து, சேமித்தும் விடுவீர்கள். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெற்ற மகிழ்வர். மனம் குழப்பம் அடையும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நன்றாக பழகி வந்த உறவினர்களும் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் விருத்தியாகும். சிலருக்கு செயல்களில் தடை உண்டாகும். சுலபமாக முடிய வேண்டிய வேலையிலும் இழுபறி ஏற்படும்.

கும்பம்

இந்த வாரம் சமூக முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்ப பொருளாதார நிலையில் எதிர்பார்த்த தனவரவு உண்டு. சமூகத்தில் மதிப்பு உயரும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தடைகளை சந்தித்து சாதனை புரிவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவார்கள். செயல்களில் கவனம் வேண்டும். கனவுகள் நனவாகும். விருப்பம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இந்த வாரம் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பொருள் கைகளுக்கு வந்து சேரும். கடன்கள் அடைபடும். தனியார் மற்றும் அரசுத்துறை உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். தெய்வ பலமும் பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். நினைத்தது நடக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

இதனையும் படியுங்கள் : புதன் வக்ர பெயர்ச்சி 2025 மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப் போகும் ராசிக்காரர்கள்!!