வெந்தயக்கீரை சாப்பிடுவது மூலமா நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் முடி நல்லா வளரும். உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும். இந்த அளவுக்கு ஒரு சூப்பரான பல வகையான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடணும். வெந்தயக் கீரையை பொரியல் செஞ்சு சாப்பிடலாம் வெந்தயக்கீரை கூட்டு செய்து சாப்பிடலாம். அப்படி அந்த மாதிரி சாப்பிடறதுக்கு பிடிக்கல அப்படின்னா வெந்தயக்கீரை சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
கண்டிப்பாக குழந்தைகள் கீரை கொடுத்தா சாப்பிட மாட்டாங்க ஆனா குழந்தைகள் கீரை சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி வெந்தயக்கீரையை பொடி பொடியா நறுக்கி கோதுமை மாவோட சேர்த்து ஒரு சூப்பரான சப்பாத்தி செஞ்சு கொடுங்க. இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா தயிர் பச்சடி வெள்ளரிக்காய் பச்சடி செஞ்சா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சுவையான சப்பாத்தி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சப்பாத்தி காலைல டிபனுக்கும் செய்யலாம். மதியம் லஞ்சுக்கும் செய்யலாம் டின்னருக்கும் செய்யலாம்.
எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. ஸ்கூல் காலேஜ் போறவங்க வேலைக்கு போறவங்க இந்த சப்பாத்தி ரெசிபியை டிபன் பாக்ஸுக்கு எடுத்துட்டு போகலாம். எப்பவுமே ஒரே மாதிரியா சாதம் செஞ்சு கொண்டு போகாம இந்த மாதிரி சப்பாத்தி செஞ்சு அதுவும் வெந்தயக்கீரை சப்பாத்தி செஞ்சு எடுத்துட்டு போங்க அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சப்பாத்தியில நம்ம கீரையுடன் சேர்த்து ஓமம் சீரகம் எல்லாமே சேர்க்கிறதால சப்பாத்தி வாசனையா பார்க்கவே கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
வெந்தயக்கீரை சப்பாத்தி | Methi Chapati Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் வெந்தயக்கீரை
- 1 கப் கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் ஓமம்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளவும் தனியா தூள் மிளகாய் தூள் உப்பு ஓமம் சீரகம் மஞ்சள் தூள் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
- அரை மணி நேரம் ஊற வைத்து சப்பாத்திக்கு தேய்த்து தோசை சட்டியில் இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!