ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!
நம்முடைய வீடுகளில் செய்யக்கூடிய ரெசிபி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ருசியும் அதில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கிரேவியை தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். வெந்தயக்கீரை மற்றும் உரு
நம்முடைய வீடுகளில் செய்யக்கூடிய ரெசிபி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ருசியும் அதில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கிரேவியை தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். வெந்தயக்கீரை மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து யம்மியான சூப்பர் கிரேவி இது.
ஒரே ஒரு விசில் வைத்தால் போதும், குக்கரில் வேலை முடிந்தது. சட்டுன்னு செய்திடலாம். வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.
வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும்.வெந்தயக் கீரை கிரேவி சப்பாத்தி, ரொட்டி, நான், வெரைட்டி சாதத்திற்கு பக்காவான சைடிஷ் இது. தேவைப்பட்டால் நீங்கள் இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம். இதன் ருசிக்கு நிச்சயம் வீட்டில் இருப்பவர்களின் நாக்கு அடிமைதான். பிறகு வெந்தயக் கீரையை வாங்கினால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.