காரசாரமான மிளகு முட்டை வறுவல் செய்வது எப்படி ?

- Advertisement -

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித கூட உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி ?

- Advertisement -

அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாம்பிடுவார்கள் அப்படி அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று அவித்த முட்டையை வைத்து மிளகு முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

மிளகு முட்டை வறுவல் | Milagu Egg Varuval Recipe in Tamil

பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாம்பிடுவார்கள் அப்படி அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று அவித்த முட்டையை வைத்து மிளகு முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Fry
Cuisine: TAMIL
Keyword: Egg, முட்டை
Yield: 4 People
Calories: 155kcal

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

வறுத்து பொடி அரைக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp மல்லி
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 1  tbsp மிளகு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 2 வர மிளகாய்

முட்டை வறுவல் செய்ய

  • 5 அவித்த முட்டை
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • வறுத்து அரைத்த பொடி
  • 4 tbsp தண்ணீர்
  • 1 கொத்து கொத்த மல்லி

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து ஐந்து முட்டைகளை சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் நன்கு கொதித்து முட்டைகள் அவிந்து வந்தவுடன் முட்டை ஓடுகளை நீக்கிவிட்டு முட்டையை பாதியாக கீறி விட்டுக் கொள்ளவும்.
  • பின்பு முட்டை வறுவல் செய்ய பொடி அரைப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கடைசியாக இரண்டு வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு வருத்த பொருட்கள் குளிர்ந்த பின் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கீறிய இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் அரை டீ ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போகும் வரை வதக்கி பின்பு கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நாம் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின்பு ஒரு நிமிடம் கழித்து மூன்று டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து வதக்கி விடவும் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பின் நம் கீறிய முட்டைகளை இதனோடு சேர்த்து நான்கு கிளறி விடவும்.
  • பின் கடாயை இறக்கும்போது ஒரு கொத்து கொத்தமல்லி இலையை தூவி விட்டு இரண்டு முறை கிளறி விட்டு வதக்கி இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் மிளகு முட்டை வறுவல் இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 155kcal | Carbohydrates: 1.1g | Protein: 13g | Fat: 11g | Saturated Fat: 3.3g | Cholesterol: 373mg | Sodium: 124mg | Potassium: 126mg | Sugar: 1.1g | Calcium: 31mg

English Overview: egg varuval is one of the most important dishes in india. egg varuval recipe or egg slvaruvak seivathu eppadi or egg varuval recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here