- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான மில்லட் சாம்பார் சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம்.
ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 30 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியில் நாம் சிறுதானியங்கள் சேர்த்து செய்வதால் இது சுவையாக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த சாதத்திற்கு எல்லாம் பெரிய சைடு டிஸ் எதுவும் செய்ய தேவையில்லை. வெறும் அப்பளம் மட்டும் இருந்தாலே போதும் அதை வைத்து சாப்பிட்டு விடலாம்.
உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்கள் வைத்து சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகள் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான மில்லட் சாம்பார் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் சாமை, தினை, குதிரைவாலி மற்றும் துவரம் பருப்பை அரை மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்துள்ள பருப்பு மற்றும் தானியங்களை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து நன்கு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, புளி தண்ணீர், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் வேகவைத்துள்ள பருப்பை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும். பின் சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி, நெய் மற்றும் வறுத்து முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மில்லட் சாம்பார் சாதம் தயார்.






