- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வார இறுதியில் பலரும் என்ன சமைத்து நாவிற்கு விருந்தளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு தென் இந்திய ஸ்பெஷல் ரெசிபியான புதினா காடை கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு காடை என்றால் மிகவும் பிடிக்கும். காடையில் பலவகையான ரெசிபி செய்யலாம். காடை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. காடை கிரேவி பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மற்றும் காடை கிரேவி காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சன் டே போன்ற வார விடுமுறை தினங்களில், நாம் அனைவரும் வழக்கமாக அசைவ உணவுகளை சமைத்தோ அல்லது வெளியில் ஆர்டர் செய்தோ குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம். அப்படி நாம் சமைக்கும் உணவுகளில் , அநேகமாக மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி போன்ற உணவுகள் தான் அதிகமாக இருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு தென் இந்திய ஸ்பெஷல் ரெசிபியான புதினா காடை கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த புதினா காடை கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சுவையான இந்த புதினா காடை கிரேவியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான காடை முட்டை தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் காடையை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தடவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சோம்பு, மல்லி, மிளகு, நட்சத்திர சோம்பு, லவங்கம், பட்டை மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் இவை அனைத்தையும் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் காடையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து மிளகு தூள், சீரகத்தூள், மல்லி தழை தூவி நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான புதினா காடை கிரேவி தயார்.





