வீட்டில் தவறா திசையில் கண்ணாடி வைத்தால் என்னனென்ன நடக்கும் தெரியுமா ? மறந்தும் கூட இந்த திசையில் வைக்காதீர்!

- Advertisement -

பொதுவாக நாம் வீட்டில் நம்மை அலங்கரித்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் பொருள் தான் கண்ணாடி. ஆனால் இந்த கண்ணாடி நம் வீட்டில் ஏராளமான வேலைகளை செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம், அதற்கு நம் வீட்டில் இருக்கும் கண்ணாடியை சரியான இடத்தில், சரியான திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். உதாரணமாக நாம் வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் வீட்டிற்குள் கண்ணாடி வைத்திருந்தால். அது தான் நம் வீட்டிற்குள் நுழைவது கெட்ட சக்தியா அல்லது நல்ல சக்தியா என்பதனை நம் வீட்டிற்குள் வைத்திருக்கும் கண்ணாடியின் அமைப்பே தீர்மானிக்கும். அதைப் பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வைக்க வேண்டிய இடம், வைக்க கூடாத இடம்

நமது வீட்டின் குளியலறையில் நீங்கள் கண்ணாடி வைக்க விருப்பப்பட்டால் நீங்கள் கண்ணாடி வைக்கும் திசையானது ஒன்று வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும் இல்லை கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் அது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டின் வேறு எந்த இடத்திலும் வடக்கு அல்லது கிழக்கு பார்த்த திசையில் கண்ணாடி வைக்க கூடாது அது நேர்மறை ஆற்றலை வெளியேற்றி மாறாக எதிர்மறை ஆற்றலை அதிகப்படுத்தி விடும்.

- Advertisement -

நம் கண்ணாடி வைக்கப்படும் அமைப்பு நம் வீட்டின் தலைவாசல் திசையை நோக்கி இருக்குமாறு வைத்தால். நாம் வீட்டிற்குள் நுழைவது நல்ல சக்தியாக மட்டுமே இருக்கும்.

நம் வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி குறுகிய பாதைகள் இருக்கும் இடத்தில் நாம் கண்ணாடி வைப்பதே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் தொழில் நடத்தும் இடத்திலேயோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலேயோ நீங்கள் பணம் வைத்திருக்கும் இடத்தை பார்த்த திசையில் கண்ணாடி வைத்திருந்தால் அங்கு நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.

-விளம்பரம்-

நமது வீட்டில் நாம் எதிர்மறை ஆற்றலை அதிகம் உணரும் இடங்களில் அந்த திசையை பார்த்தவாறு கண்ணாடி வைத்தால் அங்கு இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகிவிடும்.

நீங்கள் தொழில் செய்யும் இடம் அல்லது வேலையை பார்க்கும் இடங்களில் ஜன்னலை பார்த்தவாறு அந்த திசையில் கண்ணாடி வைத்தால் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும்.

நமது வீட்டில் படுக்கை அறையில் குறிப்பாக நான் படுக்கும் திசையை பார்த்தவாறு கண்ணாடி கண்டிப்பாக வைக்கக் கூடாது. அதையும் மீறி வைத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here