வீட்டில் பண வரவு அதிகரிக்க! கையில் இந்த ஒரு கயிறை கட்டினால் மட்டும் போதும்!

- Advertisement -

நம் நண்பர்கள் சிலர் காலில் கருப்பு கயிறு ஒன்று கட்டியிருப்பார்கள் நாமும் பல முறை பார்த்திருப்போம் அதை பார்த்து இருப்போம். ஆனால் அது எதற்காக கட்டியிருக்கிறார்கள் என பலருக்கும் தெரியாது. ஏன் நமது முன்னோர்கள் பழங்காலத்தில் இருந்தே கைகளில், இடுப்பில், கால்களில் எப்படி நம் உடலில் இந்த பாகங்களை கருப்பு கயிறை கட்டுவதை ஒரு சப்பிரதாயமாகவே செய்து வந்தனர். இடுப்பில் அருணா கயிறு கட்டி இருப்போம் கைகளிலும் ஏதாவது கருப்பு கயிறு கட்டி இருக்கும் பழக்கத்தை இன்று வரை பலர் வைத்திருக்கிறார்கள். இப்படி எதற்காக இந்த இடங்களில் எல்லாம் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நான் தெளிவாக காணலாம் வாருங்கள்.

ஆஞ்சநேயர்

இந்த கருப்பு கயிறை இவர்கள் தான் கட்ட வேண்டும் இவர்கள் கட்டக்கூடாது என்று எந்த வரைமுறையும் இல்லை. கருப்பு கயறை யார் வேண்டுமானாலும் கட்டலாம் ஆனால் ஆண்களுக்கு கட்டும்போது வலது கை, வலது காலிலும், பெண்கள் கருப்பு கயிறு கட்டும்போது இடது கை இடது காலிலும் மட்டும் கட்ட வேண்டும். நீங்கள் எதற்காக இந்த கருப்பு கயிறை நீங்கள் கட்டிக் கொண்டாலும் அப்படி நீங்கள் கட்டுப் போகும் கயிறை ஒரு நாள் முழுவதும் ஆஞ்சநேயரின் சன்னதியில் வைத்து எடுக்க வேண்டும். அப்படி நீங்கள் கட்டக்கூடிய கருப்பு கயிறு ஆஞ்சநேயர் சன்னதியில் இருக்கும் போது ஒரு முறையாவது சாலீமா படிக்க வேண்டும் அதன் பிறகு தான் இந்த கயறை நீங்கள் கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கெட்ட சக்தி நெருக்காது

இப்படி இந்த கருப்பு கயிறை நாம் கைகளில் கட்டி இருக்கும் போது நமக்கு வரும் பண வரவு அதிகமாகவே இருக்குமாம். கால்களில் கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள் அல்லவா அது எதற்காக வென்றால் அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்ப்பட்டு அவதிப்படுவார்கள் தொடர்ந்து விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளை சிக்கிக் கொண்டே இருப்பவர்கள். இது போன்ற பிரச்சினைகளை அடிக்கடி சந்திப்பவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்களாம். மேலும் இந்த கருப்பு கயிறு நமது காலில் இருக்கும் வரை நம் உடலில் எந்த நோய்கள் வந்தாலும் உடனடியாக தீர்ந்து விடும், கண் திருஷ்டி, கெட்ட சக்திகள் இது போன்ற எதிர்மறை ஆற்றல்கள் நம்மை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாம்.

-விளம்பரம்-

ஒன்பது முடிச்சு

நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த கருப்பு கயறை எப்படி கட்ட வேண்டும் தெரியுமா ? அதற்கு முதலில் நீளமான கருப்பு கயிறு ஒன்று எடுத்துக் கொண்டு நாம் எடுத்த அந்த கருப்பு கயிறில் சிறிதாக சிறிதாக ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். பின்பு முடிச்சுகள் போட்ட இந்த கயிறை ஒரு நாள் முழுவதும் ஆஞ்சநேயரின் பாதத்தில் வைக்கவும். அதன் பின்பு அந்த கருப்பு கயறை எடுத்து நம் கைகளில் கட்டிக் கொள்வதன் மூலம் நம்மை நெருங்கும் எதிர்மறை ஆற்றல் கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதோடு இந்த கயிறு நம் கையில் கட்டி இருக்கும் காரணத்தினால் நம்மிடம் இருக்கும் பணம் வீண் செலவாகாமல் இருக்குமாம்.

வீட்டை பாதுகாக்க

இதே போல நீளமான கருப்பு கயிறு எடுத்து அதில் ஒன்பது முடிச்சுகள் போட்டு ஆஞ்சநேயரின் பாதத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கயறை உங்களது வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்கவிடும் பொழுது உங்களது வீட்டில் எந்தவித கெட்ட சக்திகளும் நுழையாமல் பாதுகாக்கும். நம் வீட்டிற்குள் வரும் எந்த சக்தியாக இருந்தாலும் நிலைவாசல் வழியாகத்தான் உள்ளே வரும் அப்படி உங்கள் நிலைவாசையில் இந்த கயிறை கட்டி இருந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டுக்குள் நல்ல சக்திகள் மட்டும் ஊடுருவிய வந்து செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here