நாம் வீட்டில் காசு பணத்துடன் வறுமை இல்லாமல் வீடு முழுக்க தெய்வ சக்தி நிறைந்திருந்து நாம் வீட்டில் குடும்பத்துடன் சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு கண்டிப்பான முறையில் வாஸ்து சாஸ்திரங்கள் பங்களிப்பதும் முக்கியமானதாகும் நாம் வாஸ்து சாஸ்திரங்களை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அது நமக்கு நன்மை தருவதற்கு பதிலாக நமக்கும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் தினசரி கெடுதலை தரக்கூடியதாக மாறிவிடும். அந்த அளவிற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் சார்ந்த பிரச்சினைகள் நம் மனதை நோகடித்து விடும்.
புதிய வீடு
அதனால் தான் யார் ஒருவர் புதியதாக வீடு கட்டினாலும் அந்த வீட்டில் வாசல், சமையலறை, குளியல் அறை, படுக்கை அறை என அனைத்தும் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து நிதானமாக கட்டுகிறார்கள். இவ்வாறு நாம் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி முறைப்படி வீடு கட்டும் பொழுது அது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மையை மட்டும் பயக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த வாஸ்த்து சாஸ்திரங்கள் படி நம் வீட்டில் வைக்கும் பொருள்களை சரியான திசையை பார்த்தவாறு சரியான இடத்தில் வைத்தால் அதன் நமக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் பீரோவை சரியான திசையில் சரியான இடத்தில் வைத்தால் அந்த பணம் தானாகவே வீடு தேடி வரும்.
வருமானம் அதிகரிக்க
அப்படி நாம் வீட்டில் வைக்கும் பீரோவை தென்மேற்கு திசையை பார்த்தவாறு வைத்தால். நாம் சம்பாதிக்கும் பணத்தையும் அல்லது சேர்க்கும் பணத்தையும் அதில் வைத்து எடுக்கும் பொழுது அது நமது வீட்டின் பணப்புழக்கத்தை இரண்டு மடங்காக அதிகரித்து தரும். அதுபோல தொழில் செய்யும் நபர்கள் தங்களின் தொழிலில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற நினைத்தால். குபேரர் கூறிய திசையான மேற்கு திசையில், தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ அல்லது பணம் வைக்கும் பெட்டியை வைத்திருந்தால் நாம் வைக்கும் பணம் பல மடங்ஙாக அதிகரிக்கிறது. பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை வைக்க வேண்டும் அப்படி நீங்கள் பீரோ வைக்கும் போது சுவர்க்கும் பீரோவுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்குமாறு பார்த்து வையுங்கள்.
பண நெருக்கடி உண்டாகலாம்
நம் சுவருக்கும் பீரோவுக்கும் இடையே இடைவெளி விட்டு வைக்கும் போது வாயு பகவான் பீரோவை சுற்றி செல்வார். இவ்வாறு வாயு பகவான் பீரோவை சுற்றி செல்லுவதற்கு இடம் அளிக்காமல் பீரோவை சுவர் உடன் ஒட்டி வைத்தால் உங்களுக்கு வீட்டில் பணக்கஷ்டம் உண்டாகி, பணம் இருக்கடி ஏற்படும். நீங்களே பணத்தை சேர்க்க நினைத்தாலும் அதை சேர்க்க முடியாமல் போகும். அதனால் இதை உதாசீனப்படுத்தாமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் உதாசீனப்படுத்தும் பட்சத்தில் உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்கமாட்டாள். மேலும் நீங்கள் பீரோவை வடமேற்கு திசையை பார்த்து வைத்திருந்தால் உங்களது வீட்டில் நீங்கள் செய்யும் செலவுகள் அதிகரித்து நிறைய கடன் வாங்கும் பிரச்சனை வரும்.
பீரோ வைக்க இடம் இல்லாதவர்கள்
ஆனால் என்னதான் வாஸ்து சாஸ்திர பிரச்சனைகளை நாம் சரி செய்ய நினைத்தாலும் ஒரு சிலர் வீட்டில் இருக்கும் இடம் நெருக்கடியால் பீரோவை நிணைத்த இடத்தில் இது போன்ற வைக்க முடியாது. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் பீரோவை பின்புறம் மேற்கு திசையை நோக்கியும் பீரோவின் பின்பக்கம் கிழக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி வைக்கும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இப்படி செய்யும் போது நீங்கள் வாழ்வில் அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை சேமிக்க முடியும்.