அம்மாவாசை நாளில் இதை செய்தால் ? வீட்டில் பணம் பெருகுமாம்!

- Advertisement -

நாம் சிறுவயதிலிருந்தே சில விஷயங்களை நண்பர்களுடன் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்திருப்போம். அது போல தான் அம்மாவாசை நாட்களில் சிலருக்கு பேய் பிடிக்கும் அம்மாவாசை நாட்களில் அது நடக்கும், அமாவாசை இது நடக்கும் என இது போன்ற இன்னும் சில விஷயங்களை நண்பர்களுடன் பேசி இருப்போம் இருந்தாலும் அம்மாவாசை நாளை பற்றி நமது புராணக் கதைகளிலிருந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் வரை அனைத்துமே சில விஷயங்களை அமாவாசை நாட்களில் செய்யக்கூடாது என்றும் அதற்கான காரணங்களை பற்றியும் கூறி தான் வருகின்றனர். அப்படி அமாவாசை நாட்களில் என்னதான் செய்யக்கூடாது செய்தால் அப்படி என்ன நடக்கும் என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தொழில் சம்பந்தப்பட்ட காரியங்கள்

அம்மாவாசை நாட்களில் நமது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் செய்வதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அமாவாசை தினத்தன்று பூமியில் இருக்கும் இயற்கை தாயின் கடல் பரப்பிலேயே மாற்றங்கள் நிகழும் இருக்கும் பட்சத்தில் மனிதர்களுக்கு மாற்றம் இல்லாமலா போய்விடுமா. அதனால் இந்த நாட்களில் நாம் செய்யும் விஷயங்கள் சரியாக நடக்குமா என்று பார்த்தால் அது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். அதனால் அமாவாசை நாட்களில் முடிந்த அளவிற்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிரமமான வேலைகள்

அம்மாவாசை நாட்களில் மனிதனுக்குள் ஒரு சிறு மன படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் செய்கின்ற வேலையும் படபடப்போடு செய்யும்போது நீங்கள் செய்யும் வேலை சரியான முறையில் இருக்காது. அது போன்று சற்று சிரமமான வேலைகளையும் அமாவாசை நாட்களில் செய்யாதீர்கள் ஏனென்றால் அம்மாவாசை தினத்தன்று கைகளில் அடிபட்டால் அது குணமாவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

கோலம் இடுதல்

அம்மாவாசை நாட்களில் வீட்டு முன் கோலம் போடுவதை தவிர்த்து விடுங்கள் அதையும் மீறி அமாவாசை தினம் கோலம் போடுவதன் மூலம் இறந்து போன உங்கள் குடும்பத்தினரே நீங்களே வீட்டிற்குள் அழைப்பதற்கு சமம். நம்ம குடும்பத்தினர் தானே வீட்டிற்குள் வந்தால் என்ன என்று நீங்கள் நினைத்தால். இறந்து போன ஆன்மாக்கள் எதிர்மறை ஆற்றலை கொண்டவர்கள் அவர்கள் உங்கள் வீட்டிற்குள் வரும் பட்சத்தில் உங்கள் வீட்டை எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து கொள்ளும் அதனால் அமாவாசை தினங்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்த்து விடுங்கள்.

உன்னதமான நாள் அம்மாவாசை

என்னடா அப்போது அம்மாவாசை நாள் என்றாலே அது கெட்டது மட்டும் தான் நடக்குமா என்று கேட்டால் அதுவும் உண்மை இல்லை. நம் முன்னோர்கள் கூறியுள்ளது படி அம்மாவாசை நாள் போல ஒரு உன்னதமான நாள் கிடையாது. அமாவாசை நாள் என்பது அம்மனுக்கு பூஜை செய்ய உகந்த நாளாம். இந்நாளில் தெய்வீக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லதாம். இந்த அமாவாசை நாட்களில் ஏழை எளியோர்களுக்கு மற்றும் இயலாதவர்களுக்கு தானம் செய்வதற்கு கூட உகந்த நாட்கள். இப்படி நாம் செய்யும் பட்சத்தில் வீட்டில் உள்ள பணம், செல்வங்கள் என அனைத்தும் பல மடங்காக பெருகும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here