அதிக பணமும், செல்வமும் வீடு தேடி வர மணி பிளாண்ட் செடியை இப்படி வளருங்கள்!

- Advertisement -

நம்மில் பெரும்பாலானவர் வீட்டில் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடி கொடிகளுடன் கண்டிப்பான முறையில் நமது வீட்டிற்கு பண வரவை அதிகரித்து, செல்வத்தை பெருக்கி, அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் வீட்டில் வந்து கொட்டச் செய்யும் மணி பிளாண்டையும் சேர்த்துதான் வீட்டில் வளர்ப்பார்கள். பெரும்பாலான செடிகளை நாம் வளர்க்கும் போது அதையும் நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போல பராமரித்து வர வேண்டும் ஆனால் நாம் வீட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் இந்த மணி பிளான்டை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையான வேலை.

-விளம்பரம்-

இதை அதிக கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும் என்ற அவசியமும் இருக்காது சாதாரணமாக ஒரு மிட்டாய் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் மணி பிளாண்டின் ஒரு பகுதியை வைத்தால் கூட அது தளுத்து வேர் விட்டு கொடி போல அந்த இடத்திலேயே வளர்ந்து நம் வீட்டிற்கு அழகையும் தரும் சகல செல்வங்களையும் அள்ளித் தரும். இப்படிப்பட்ட மணி பிளாண்ட் செடியை வளர்க்க ஒரு சில வேலைகளை நாம் பார்த்தாலே போதும் மணி பிளான்ட் செழிப்பாக வளரும் அந்த மணி பிளான்ட் எந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ அந்த அளவிற்கு நம் வீடும் செழிப்பாக இருக்கும்.

- Advertisement -

முதலில் மணி பிளான்ட் செழிப்பாக வளர்வதற்கு, மணி பிளாண்டின் ஒரு கிளையை எடுத்து வந்து ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்து வளர்க்க வேண்டும், தண்ணீரில் தளுத்து வேர் விட்டு வளர்ந்து வந்த பின்பு அந்த மணி பிளாண்டை நாம் ஏற்கனவே மண்ணை நிரப்பி வைத்திருக்கும் தொட்டியில் நட்டு வைக்கலாம். இப்படி நாம் நட்டு வைக்கும் மணி பிளாண்ட் செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். அதுக்காக அளவுக்கு அதிகமான தண்ணீரையும் இந்த மணி பிளாண்ட் செடிக்கு நம் ஊற்றக்கூடாது. நாம் மணி பிளாண்ட் நட்டு வைத்திருக்கும் மண் வறட்சி அடையாத அளவிற்கு தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி வந்தால போதுமானதாக இருக்கும்.

இப்படி நீங்கள் வைக்கும் மணி பிளான்ட் சூரிய வெளிச்சம் படும்படியாக வைத்தால் மணி பிளாண்டின் கொடி மடமடன செழிப்போடு வளர்ந்து உங்கள் வீட்டை அலங்கரித்து விடும். ஆனால் அதன் வளர்ச்சி குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் சூரிய வெளிச்சம் படும் இடத்திலிருந்து சற்று தள்ளி நிழலில் இருக்கும் படி வைத்தாலே போதுமானதாக இருக்கும். வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்ப்பவர்கள் இதுபோன்று செய்யலாம்.

ஆனால் நம் வீட்டில் வளர்க்கும் மணி பிளாண்ட் செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ அவ்வளவு செல்வம் நம் வீட்டிற்கு வந்து சேரும் என்பது நம்பிக்கை. அதனால் மணி பிளான்டை வீட்டில் வளர்க்கும் போது தொட்டியில் வளர்க்கலாம் அதில் தவறில்லை ஆனால் மணி பிளான்டை வீட்டிற்கு வெளியே வளர்க்கும் போது தொட்டிகளில் வளர்ப்பதை விட நேரடியாக மணலில் நட்டு வளர்க்கும் போது அதன் வேகம் அதிகரித்து நன்கு செழிப்பாக வளரும்.

-விளம்பரம்-

எப்படி நாம் வீட்டில் வளர்க்கும் மணி பிளான்ட் செடி ஒரு கொடி வகையை சேர்ந்தது என்பதால் மணி பிளான்ட் கொடி படர்ந்து செழிப்பாக வளர்வதற்கு ஏற்றவாறு அதன் அருகே சிறு சிறு கயிறுகளை கட்டியும் அல்லது கம்புகளை வைத்தும் அந்த கொடி பற்றி வளர்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் அப்படி வளர்ந்து வரும் மணி பிளாண்ட் செடியின் இலைகள் வாடி போகும்போது அந்த வாடிய இலைகளை உடனுக்குடன் நீக்கிவிட வேண்டும். மேலும் மணி பிளாண்ட் கொடி கிளைகள் விட்டு அதிவேகமாக வளரும்போது அதை வெட்டி சரி செய்து கொள்ளுங்கள் இப்படி நாம் மணி பிளான்ட் செடியை பார்த்து பக்குவமாக பராமரித்து வளர்க்கும் போது நமது வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகி நலமாக வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here