- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முடக்கத்தான் கீரை உள்ளது என்றால், இதுவரை முடக்கத்தான் கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள் என்றால் அப்படியானால் அடுத்தமுறை முடக்கத்தான் கீரையை கொண்டு ஊத்தப்பம் செய்யுங்கள்.
முடக்கத்தான் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல ஊத்தப்பம் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு ஊத்தப்பம் சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை முடக்கத்தான் கீரையில் இப்படி ஊத்தப்பம் செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த முடக்கத்தான் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கீரையின் அடர் பச்சை நிறத்தில், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கு குறைவில்லாத இந்த அற்புதமான ஊத்தப்பம் ரெசிபியை நிச்சயம் செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2 ஊத்தப்பம் ஆதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
பின் தோசை மாவில் சிறிதளவு ரவை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் முடக்கத்தான் இலை, சீரகம், பூண்டு, கருவேப்பிலை, வரமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும். பின் பிரெட்டை சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த கலவையை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஒரு கரண்டி எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றி அதில் அரிந்த வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லி தூவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முடக்கத்தான் பிரெட் ஊத்தப்பம் தயார். இதற்கு கார சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.






