Advertisement
சைவம்

முளைக் கீரை வாங்கி ஒரு முறை பொரியல் நப்படி செய்து இப்படி கொடுத்தால் ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் பலவித பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அவ்வாறு கீரையை ஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடைசல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே முளைக் கீரையை இப்படி பொரியல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து பாருங்கள். தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.

Advertisement

கீரையை ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இந்த முறையில் முளைக் கீரை பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இதேபோல முளைக் கீரையை வைத்து பொரியல் செய்முறையை இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க புதுமையான இந்த 2 ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முளைக் கீரை பொரியல் | Mulai Keerai Poriyal Recipe In Tamil

Advertisement
RecipeMaker.userRating.enter(this)" onfocus="window.WPRecipeMaker.userRating.enter(this)" onmouseleave="window.WPRecipeMaker.userRating.leave(this)" onblur="window.WPRecipeMaker.userRating.leave(this)" >
Print Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை. கீரையை ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாகஇந்த முறையில் முளைக் கீரை பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும்.ரசம் சாதம் சாம்பார் சாதம்
Advertisement
எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.இதேபோல முளைக் கீரையை வைத்து பொரியல் செய்முறையை இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப்போகின்றோம். வாங்க புதுமையான இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Mulai Keerai Poriyal
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 184

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு முளைக்கீரை
  • 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 வரமிளகாய்
  • 6 சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • சின்ன வெங்காயத்தைப்பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். திட்டமாகத் தண்ணீர் விட்டு, அதுகொதித்ததும் கொஞ்சமாகச் சுண்ணாம்பு போட்டு அது கரைந்ததும் கீரையைப் போடவும்.
  • கீரை வெந்ததும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
  • அரைக்கீரை,பொன்னாங்கண்ணிக் கீரையிலும் இதே போல பொரியல் செய்யலாம். சர்க்கரை சேர்ப்பதால்கீரை நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.

Nutrition

Serving: 520g | Calories: 184kcal | Carbohydrates: 8g | Protein: 11g | Potassium: 214mg | Fiber: 6g | Iron: 4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

6 நிமிடங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

1 மணி நேரம் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

3 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

6 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago