- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. மொத்த மரமே மருத்துவ குணம் வாய்ந்தது என்றால் அது முருங்கை, முருங்கை இலையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முருங்கை இலைகளை அடிக்கடி சாப்பிட முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வரும் இந்த முருங்கை மரத்தின் இலைகளை காய வைத்து, பொடியாக்கி காலை வேளையில் தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
நோய் தொற்றுகளின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசிமான ஒன்றாக உள்ளது. முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அந்த வகையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான புளி குழம்பு வைக்கலாம் என்று இன்று பார்க்கலாம்.
முருங்கைக் கீரையை வைத்து முருங்கைக் கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி புளிக்குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும்.
இதனையும் படியுங்கள் : ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!
Ingredients
Method
முதலில் முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
பின் புளியை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். அதன்பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் குழம்பு சிறிது சுண்டி கெட்டியாக வந்ததும் முருங்கை இலையை சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை இலை புளிக்குழம்பு தயார்.






