- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்து கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்த முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி. இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.
இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை புளிக்குழம்பு வடிவில் உண்ணுவது சிறப்பாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்போருக்கு முருங்கைக்காய் புளிக்குழம்பு செய்து கொடுங்கள். இந்த முருங்கைக்காய் புளிக்குழம்பு சற்று இனிப்பு கலந்து இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான இறால் முருங்கைக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!
Ingredients
Method
முதலில் முருங்கைக்காய், வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
பின் கறிவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி முருங்கைக்காய், வெல்லம், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் புளி கரைசல் ஊற்றி மேலும் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார்.






